ஒரு பெண் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பதிவில், கார்ப்பரேட் வாழ்க்கையில் நேர்ந்த கடுமையான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு வருடங்களாக தனது நிறுவனத்தில் கடுமையாக பணியாற்றியிருந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கூட எடுக்க முடியவில்லை.. இதுதான் கார்ப்ரேட் நிறுவனமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், “நான்கு வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கூடுதல் வேலைகளைச் செய்யவும், புதிய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், கடினமான காலங்களில் குறைந்த சம்பளத்திலும் பணியாற்றியுள்ளார். தனிப்பட்ட தேவைகளுக்காக விடுப்பு கோரும்போது, நிறுவனம் அதை நிராகரித்தது; அவசர காலங்களில் விடுமுறை கேட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள் என காட்டமாக கூறுவதாக வேதனை தெரிவித்தார்.
இந்த அனுபவம், கார்ப்பரேட் வாழ்க்கையில் விடுப்பு கோருதல் கூட ஒரு ஊழியரின் உரிமை என்றாலும், அது கடுமையாக எதிர்ப்படக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. நிறுவனங்கள், ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சில நேரங்களில் மாத சம்பளத்தை கட்டுப்படுத்தும் வழியாக கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் வேலை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான், முழு வாழ்க்கை அல்ல என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை.
நிபுணர்கள் கூறுவது, ஊழியர்களின் நலனுக்காக ஒழுங்காக திட்டமிடப்பட்ட விடுப்புகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமைகளை ஊழியர்களுக்கு வழங்குதல், ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் மனிதநேயம் குறிக்கும். கார்ப்பரேட் சூழலில் பணியாற்றும் நமது சமூகத்தில், இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படுத்துவதும், உரிமைகள் மீறப்படுவதை எதிர்க்கும் முயற்சியாகும்.