நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் தவறு இல்லை.. ஆனால் அதை எப்படி தயாரிக்கிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் பிரச்சனை உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதயத்திற்கு நன்மை தரும் உணவுகளைக்கூட அளவுக்கு அதிகமாக சமைப்பது, அதிக நெய் சேர்ப்பது, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
இந்திய உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தீங்கு விளைவிக்கும் சமையல் மற்றும் உணவுப் பழக்கங்களால் அதன் பலன்களை இழக்கின்றன. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, உணவுகளை அதிகமாகப் பொரிப்பது, முழு கொழுப்பு கொண்ட பால் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை ஆரோக்கியமான உணவுகளையும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் உணவுகளாக மாற்றுகின்றன.
கொலஸ்ட்ரால் என்பது முற்றிலும் தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல. இது நமது செல்களுக்கும் ஹார்மோன்களுக்கும் அவசியமானது. இதில், தமனிகளில் படிந்து நோய்களை உருவாக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) மற்றும் ரத்த ஓட்டத்திலிருந்து கொலஸ்ட்ராலை அகற்றும் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) என இரண்டு வகைகள் உள்ளன. LDL அளவைக் குறைத்து HDL அளவை அதிகரிப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கு முக்கியம்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிகள் :
இந்திய சமையலறையே கொலஸ்ட்ராலை நிர்வகிக்க ஒரு சிறந்த இடம். தினமும் ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் கிரீன் டீ ஆகியவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை 20% முதல் 25% வரை குறைக்கலாம். கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள ஓட்ஸ் மற்றும் ஆப்பிள், தாவர ஸ்டீரால்கள் உள்ள நட்ஸ், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன் மற்றும் ஆளி விதைகள், அத்துடன் பூண்டு மற்றும் கிரீன் டீ ஆகியவை கொலஸ்ட்ராலை இயற்கையாகவே குறைக்க உதவுகின்றன.
பொரிப்பதற்கு பதிலாக கிரில் அல்லது வறுத்து சாப்பிடுவது, எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பது போன்ற எளிய மாற்றங்கள் நம் இதயத்தை பாதுகாக்கும். நம் ஆரோக்கியத்திற்கான பதில் நமது பாரம்பரிய உணவு முறையிலேயே உள்ளது. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
Read More : விஜய்யை பார்க்க சென்ற ரசிகர் மர்ம மரணம்..!! வீட்டிற்கு சடலமாக வந்த தம்பி..!! திடுக்கிட வைத்த அண்ணன்..!!