ஓய்வுபெற்ற பிறகு நிலையான வருமானம் இல்லாமல் வாழ்க்கை சிரமமாகிவிடும். இதை சமாளிக்க, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க, இந்திய அஞ்சலகம் வழங்கும் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)” ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த திட்டம் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விருப்ப ஓய்வு (VRS), சூப்பர்ஆனுவேஷன் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்ற நபர்களும் இதில் கணக்கைத் தொடங்கலாம். தற்போது, இந்த திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.6 லட்சம் வட்டி பெறலாம். அதாவது, வட்டி வருவாய் மூலமாகவே மாதாந்திர நிம்மதி பெற முடியும்.
மூத்த குடிமக்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் இந்த SCSS கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 1,000 மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சம் ரூ. 15,00,000 வரை முதலீடு செய்ய அனுமதி உண்டு. வட்டி காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும்.
இந்த கணக்கு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும். பிறகு, விரும்பினால் மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். சில நிபந்தனைகளின் கீழ் முன்கூட்டியே நிறைவு செய்யவும் முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80C இன் கீழ் ₹1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். இந்திய அரசால் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டதால், SCSS திட்டம் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடு என மூத்த குடிமக்கள் கருதுகின்றனர்.
Read more: ரஷ்ய எண்ணெய் விவகாரம்.. கொளுத்தி போட்ட ட்ரம்ப்.. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா கொடுத்த பதிலடி..