பெண் குழந்தையின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலச் செலவுகளுக்காக பெற்றோர்கள் கவலைப்படுவது இயல்பு. ஆனால், அந்தக் கவலைக்கு ஒரு உறுதியான தீர்வை மத்திய அரசு வழங்கியுள்ளது. அது தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana).
சுகன்யா சம்ரிதி யோஜனா என்றால் என்ன? மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான இது, 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கப்படும் சேமிப்பு திட்டமாகும். நாட்டின் எந்த தபால் நிலையத்திலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் இந்தக் கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதியால் பாதுகாப்பது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு பெண் குழந்தைகளுக்கே கணக்கைத் திறக்க அனுமதி உண்டு.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* ஆண்டுக்கு 8.20% வட்டி வழங்கப்படுகிறது (கூட்டு வட்டி அடிப்படையில்).
* கணக்கில் பெறப்படும் வட்டிக்கும் முதலீட்டுத் தொகைக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
* வருமான வரி சட்டம் பிரிவு 80C-இன் கீழ் ஆண்டுக்கு ₹1.50 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.
* ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ₹250 முதல் அதிகபட்சம் ₹1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
* கணக்கு 21 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும், அல்லது பெண் குழந்தையின் திருமணத்தின் போது மூடலாம் (18 வயதுக்கு மேல் திருமணம் ஆகும்போது).
* கணக்கை தேவையின்படி எந்த தபால் நிலையத்திற்கும் மாற்றலாம்.
ரூ.24 ஆயிரம் டெபாசிட் செய்தால் ரூ.11 லட்சம் எப்படி கிடைக்கும்?
நீங்கள் 2025 ஆம் ஆண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கைத் திறக்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. தற்போது உங்கள் மகளுக்கு 5 வயது என்றால், இந்தக் கணக்கு 2044 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையும். நீங்கள் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.24,000 முதலீடு செய்தால், நீங்கள் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.3,60,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதன் பிறகு, முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.7,48,412 மொத்த வட்டி கிடைக்கும், மேலும் முதிர்வு மதிப்பு ரூ.11,8,412 ஆக இருக்கும்.
தேவையான ஆவணங்கள்:
- SSY கணக்கு திறப்பு படிவம்
- பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்று (ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் முதலியன)
- முகவரிச் சான்று
- FATCA படிவம்
- ஆதாரில் பிறந்த ஆண்டு மட்டும் இருந்தால், பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.
கணக்கு திறக்கும் நடைமுறை:
- தபால் நிலையம் அல்லது வங்கியில் SSY கணக்கு திறப்பு படிவத்தை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
- தொடக்கத் தொகையைச் செலுத்தவும்.
- விருப்பமிருந்தால் நெட்பேங்கிங் வழியாக தானியங்கி டெபாசிட் அமைக்கலாம்.
Read more: குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!



