ஷாதி டாட்காம் (Shaadi.com) நிறுவனர் மற்றும் பிரபல முதலீட்டாளரான அனுபம் மிட்டல், இந்திய இளைஞர்கள் செல்வத்தைச் சேர்ப்பது குறித்து மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார்.
செல்வம் சேர்ப்பது என்பது கடினமான செயல் அல்ல. மாறாக, அது மிகவும் எளிமையான மற்றும் ஒழுக்கமான பழக்கம் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளம் தலைமுறையினர், சரியான நிதி திட்டமிடலுடன் கூடிய ‘கூட்டு முதலீட்டின்’ (Compounding) சக்தியைப் பயன்படுத்தினால், நிச்சயம் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை அடைய முடியும் என்று கூறுகிறார்.
கூட்டு முதலீட்டின் சக்தி :
“முதலீடு சம்பந்தமான ஒவ்வொரு கேள்விக்கும் நான் தரும் ஒரே பதில், அது நாம் மேற்கொள்ளும் முதலீட்டைப் பொறுத்தது தான்” என்று அனுபம் மிட்டல், ஒவ்வொருவரின் நிதி நிலை மாறுபடும் என்றாலும், கூட்டு முதலீட்டை புரிந்துகொள்வது மிக அவசியம் என்கிறார். மனித மூளை கூட்டுத்தொகையின் வலிமையை உணர்வதில் சிரமப்படுவதால்தான் பலர் விரைவான செல்வத்தை தேடி தவறான வழியில் செல்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “நீங்கள் 20 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், 100 கோடி ரூபாய் அல்லது 10 முதல் 20 மில்லியன் டாலர்கள் வரை சேர்க்க முடியும்” என்கிறார். தனிப்பட்ட பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் ஆபத்தை தவிர்த்து, எஸ்ஐபி (SIP) மூலம் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம், கூட்டுத்தொகையின் சக்தி உங்களது முதலீட்டை மெதுவாகவும், உறுதியாகவும் வளர்த்துத் தரும் என்று மிட்டல் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
முன்னோர்களின் அறிவுரைகள் முக்கியம் :
நிதி பற்றி ஞானத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆக முடியும் என்று கூறும் மிட்டல், இளைஞர்கள் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது முக்கியம் என்று கூறியுள்ளார். நம்முடைய பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி கூறிய தங்கம் வாங்குங்கள், வீடு வாங்குங்கள் என்ற அறிவுரை வெறும் பழமொழி மட்டுமல்ல. நிதியைச் சேர்ப்பதற்கான சிறந்த நுண்ணறிவின் வெளிப்பாடு” என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், போதுமான நிதி இருக்கும்போது, சொந்த வீடு வாங்குவது, வாழ்வில் வரும் பெரிய ஆபத்துகளை எதிர்த்து நிற்கும் தைரியத்தை தரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அனுபம் மிட்டலின் கூற்றுப்படி, கோடீஸ்வரனாக மாறுவதற்கு ரகசியம் என்று எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக, காலத்திற்கேற்ற கட்டுப்பாடு, தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கம் மற்றும் கூட்டு முதலீட்டின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவையே முக்கியமாகும். செல்வம் என்பது திடீரென கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்துவிடாது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு முதலீட்டின் மூலமும் அதை மெதுவாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதே அவரது ஆலோசனையாகும்.
Read More : தமிழக விவசாயிகளே..!! இனி உங்களுக்கு ரூ.2,000 கிடைக்காது..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



