நம்மைச் சுற்றி காபியை விரும்புபவர்கள் அதிகம். ஆனால் பால், சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் பிளாக் காபி (Black Coffee)-யை விரும்புவோர் குறைவு. சுவை கடுமையாக இருந்தாலும், பிளாக் காபி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மாதம் தினமும் பிளாக் காபி குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
சோர்வு குறைவு: காபியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. ஹெல்த்லைன் மற்றும் பப்மெட் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, தினசரி காபி அருந்துபவர்களுக்கு சோர்வு குறைந்து, நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 3 கப் காபி குடிப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் ஓரளவு குறைக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எடை மேலாண்மை: பிளாக் காபி வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடலில் கொழுப்பு எரியும் வேகம் உயருகிறது. தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கருப்பு காபி குடிப்பதன் மூலம் எடை குறைப்பை எளிதாக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எடை குறைக்க விரும்புவோர் கருப்பு காபியில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்; ஆனால் அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
வகை–2 நீரிழிவு நோய் அபாயம் குறைவு: பல ஆய்வுகளின்படி, தினமும் ஒரு கப் கருப்பு காபி குடிப்பது வகை–2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். காபியில் உள்ள சில சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூளை ஆரோக்கியம்: பிளாக் காபி குடிப்பவர்களுக்கு நினைவாற்றலை பாதிக்கும் அல்சைமர் நோய் அபாயம் குறைவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து பிளாக் காபி குடிப்பது, எதிர்காலத்தில் மூளை தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சருமத்திற்கு நன்மை: பிளாக் காபி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரல் உள்ளிட்ட உட்புற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படுவதன் மூலம் சருமமும் இயற்கையாக பளபளப்பாகும். தொடர்ந்து குடித்தால் முகப்பரு குறையும், சருமம் தெளிவாக மின்னும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர்களின் எச்சரிக்கை: தினமும் ஒரு முதல் இரண்டு கப் பிளாக் காபி அருந்துவது போதுமானது. அதற்கு மேல் குடித்தால் தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
Read more: Today Rasi Palan: இன்று, இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம்.. சாதகமான பலன்கள்!



