பலரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் கருவாடு முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் பலருக்கு கருவாடு பிடிக்காது. இதற்கு முக்கிய காரணம் அதிலிருந்து வரும் வாசனை. இருப்பினும், கொழுப்பு குறைந்த, அதிக புரதம் கொண்ட அசைவ உணவாக கருவாடு விளங்குகிறது. குறிப்பாக, கருவாட்டில் 80 முதல் 85 சதவீதம் வரை புரதம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருவாடு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:
- கருவாடு உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடைகின்றன.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கின்றன.
- சளி, இருமல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு கருவாடு கறி நன்மை தருகிறது.
- பெண்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் சிறுநீர்ப்பை, கருப்பை தொடர்பான சில பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
- வாதம், பித்தம் மற்றும் இரத்த ஓட்டக் கோளாறுகளை குறைக்கிறது.
- பாலூட்டும் தாய்மார்கள் கருவாடு சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கலாம்.
யார் கருவாடு சாப்பிடக் கூடாது?
* இதய நோய், செரிமான கோளாறு, தோல் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் கருவாட்டை தவிர்க்க வேண்டும்.
* குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவாட்டை சாப்பிடக் கூடாது என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
* தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் கருவாடு சாப்பிட்டால் சொறி, அரிப்பு, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
கருவாடு எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது? கருவாடு சாப்பிடும்போது, மோர், தயிர், பச்சை காய்கறிகள் போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில நேரங்களில் இது உணவு விஷத்தை கூட ஏற்படுத்தும். தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு முன்போ அல்லது பிறகோ கருவாடு சாப்பிடக்கூடாது. குறிப்பாக சைனஸ், சளி, இருமல், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் இவ்வாறு செய்வதால் பிரச்சனை அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



