உள்துறை அமைச்சகம் (MHA) புதிய இணைய பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதில், திருமணத் தொடர்பு இணைய தளங்கள் மூலம் ஒருவரின், உணர்ச்சியை பயன்படுத்தி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்புக்கான மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற மிரட்டல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. திருமண தளங்களின் மூலம் நடக்கும் போலி ப்ரொஃபைல்கள் மற்றும் முதலீட்டு மோசடிகள் தொடர்பான புகார்கள் மிக அதிகரித்துள்ளன என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Shaadi.com, Jeevansathi.com, Matrimony.com போன்ற முக்கிய திருமண இணைய தளங்களிலும், Tinder, Bumble போன்ற டேட்டிங் ஆப்களிலும் மோசடிகள் மிகவும் நம்பகமாக தோன்றும் போலி ப்ரொஃபைல்களை உருவாக்குகின்றனர். இவை பெரும்பாலும் திருடப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களையும், பொய்யான தனிப்பட்ட விவரங்களையும் பயன்படுத்துகின்றன. வெற்றிகரமான ஒரு தொழில்முறை நபராகத் தோன்றுவதற்காக NRI, பாதுகாப்பு படை அதிகாரி அல்லது பிரபல நிறுவன ஊழியர் போன்ற அடையாளங்களைப் பயன்படுத்துவது பொதுவான யுக்தியாகிவிட்டது.
மோசடிகள் திட்டமிட்டு நிதியளவில் நிலையானவர்களை குறிவைக்கின்றனர். அதற்காக வயது, தொழில், வருமானம் போன்ற ஃபில்டர்-களை பயன்படுத்தி தனிப்பட்டவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
ஒரு “மேட்ச்” உருவான உடனே, குற்றவாளிகள் அடிக்கடி தொடர்பு கொள்வதைத் தொடங்குகிறார்கள்.. கால்கள், மெசேஜ், WhatsApp வீடியோ அழைப்புகள் மூலமாக தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.. இதன் மூலம் உணர்ச்சி நெருக்கம் உருவாக்கப்படுகிறது.
சிலர் வீடியோ கால் செய்யும் போது கூட டிஜிட்டலாக மாற்றியமைக்கப்பட்ட பின்னணி (fake background) பயன்படுத்தி, தங்கள் பொய்யான அடையாளத்தை நம்ப வைக்கிறார்கள். காலப்போக்கில், பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் உண்மையான வாழ்க்கை துணையை கண்டுபிடித்துவிட்டதாக நம்பத் தொடங்குகிறார்கள்.
அந்த நம்பிக்கை உருவான பிறகு தான் மோசடிகள் முதலீட்டு வாய்ப்புகளை பற்றி பேசத் தொடங்குகிறார்கள். அவை பெரும்பாலும் கிரிப்டோ கரன்சி, ஆன்லைன் டிரேடிங் திட்டங்கள் போன்றவை. குறிப்பாக போலி அவசர நிலைகள் உருவாக்குவது, உணர்ச்சியை பயன்படுத்தி சமாதானப்படுத்துவது, உயர் லாபம் கிடைக்கும் என்று பொய்யான உறுதிப்படுத்தல்கள் அளிப்பது இவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மிகப் பெரிய தொகையை மாற்ற வைக்கிறார்கள்.
பல புகார்கள், வாரங்களோ அல்லது மாதங்களோ ஆன உணர்ச்சி பிணைப்புக்குப் பிறகு இவ்வாறு சிக்கியதாக கூறப்படுகிறது..
Read More : 20 லட்சம் மொபைல் எண்களை பிளாக் செய்த TRAI..! மோசடி அழைப்புகளை தடுக்க அதிரடி நடவடிக்கை..!



