பூமியில் உள்ள சில இடங்கள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.. தீவுகள் முதல் பாலைவனங்கள் வரை, உலகம் முழுவதும் உள்ள மிகவும் ஆபத்தான இடங்கள் குறித்து பார்க்கலாம்..
பாம்பு தீவு, பிரேசில்
பாம்பு தீவு என்று பிரபலமாக இந்த தீஇவு பிரேசிலின் கடற்கரையில் அமைந்துள்ளது. உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான தங்க ஈட்டி தலை விரியன் பாம்புகள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன.. இது மிகவும் விஷத்தனமை கொண்ட பாம்பாகும்.. இந்த பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே மரணம் நிச்சயம்.. எனவே இந்த பாம்பு தீவுக்கு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.. எனினும் சிறப்பு அனுமதிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளை மட்டுமே உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படுகிறது.. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த தீவிற்கு சென்றால் உயிருடன் திரும்புவது கடினம். ஒரு காலத்தில் கடற்கொள்ளையர்கள் இந்த தீவை புதையலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.. இந்த புதையல்கள் பாம்புகளால் பாதுகாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது..
டானகில் பாலைவனம்
வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள டானகில் பாலைவனம் பூமியின் வெப்பமான, வறண்ட இடங்களில் ஒன்றாகும். இங்கு வெப்பநிலை பெரும்பாலும் 50°C க்கு மேல் உயரும்.. இங்கு மழைப்பொழிவு என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.. அமிலக்குளங்கள், எரிமலை ஏரிகள் மற்றும் நச்சு வாயு வெளியேற்றங்கள் என இந்த இடம் உண்மையிலேயே வேறொரு ஆபத்தான இடமாக உள்ளது.. இந்த பகுதி ஒரு டெக்டோனிக் டிரிபிள் சந்திப்பின் ஒரு பகுதியாகும், இது எரிமலை ஆக்டிவாக இருக்கும்… பாலைவனத்தின் நச்சு வாயுக்கள், கொதிக்கும் வெப்பம் ஆகியவை இதனை ஆபத்தான இடமாக மாற்றுகின்றன..
தர்வாசா எரிவாயு பள்ளம், துர்க்மெனிஸ்தான்
“நரகத்திற்கான கதவு” என்று அழைக்கப்படும் தர்வாசா எரிவாயு பள்ளம் துர்க்மெனிஸ்தானின் கரகம் பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ளது. 1970களில் சோவியத் இந்த இடத்தை தோண்டிய போது இந்த இயற்கை எரிவாயு வயல் உருவானது.. எனினும் அங்கிருந்து மீத்தேன் பரவுவதைத் தடுக்க புவியியலாளர்கள் அதை தீ வைத்தனர். இந்த நெருப்பு சில நாட்களில் அணைந்துவிடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் எரிந்து வருகிறது. 230 அடி அகலமுள்ள இந்த மிகப்பெரிய பள்ளம், பயங்கரமான சிவப்பு ஒளியுடன் கந்தகத்தின் கடுமையான வாசனையை வெளியிடுகிறது. இங்கு செல்வது என்பது உயிரை விடுவதற்கு சமம்..
வடக்கு சென்டினல் தீவு, இந்தியா
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவில் பழங்குடியினர் வசிக்கின்றனர். பூமியில் தொடர்பு கொள்ளப்படாத கடைசி மக்களாக இந்த பழங்குடியினர் கருதப்படுகிறார்கள். இந்த பழங்குடியினரை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம்.. அங்கு செல்ல முயன்ற பலர் கொல்லப்பட்டுள்ளனர்.. வேட்டையாடுதலை நம்பி வாழும் இந்த பழங்குடியினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உலகம் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது..
ஓய்மியாகோன், ரஷ்யா
ரஷ்யாவின் தொலைதூர கிராமமான ஓய்மியாகோன், பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் குளிரான இடமாகும். இங்கு வெப்பநிலை வழக்கமாக -60°C க்குக் கீழே குறையும். இதனால் வெளிப்புறப் பணிகள் ஒரு சவாலாகின்றன. கண் இமைகள் உறைகின்றன, கார்கள் நாள் முழுவதும் இயங்குகின்றன. மேலும் பள்ளிகள் -52°C க்குக் கீழே குறையும் போது மட்டுமே மூடப்படும். கடுமையான குளிர் இருந்தபோதிலும், சுமார் 500 பேர் வாழ்கின்றனர். இந்த இடத்தின் பிரம்மிப்பூட்டும் குளிர் மக்களை ஈர்க்கிறது.. ஆனால் சரியான உபகரணங்கள் அல்லது முறையான ஆடை இல்லாமல் நீண்ட நேரம் இங்கு இருப்பது ஆபத்தானது.
Read More : கர்ப்பப்பை இல்ல.. பெண்ணின் கல்லீரலில் வளரும் கரு.. இந்தியாவின் முதல் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்..