உடலின் இந்த பகுதியில் வலி இருந்தால் கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்; உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..!

fatty liver

நமது உடலில் பலவிதமான வலிகள் ஏற்படுகின்றன.. சில நேரங்களில் அதை நாம் புறக்கணிக்கிறோம். ஒரு சில நேரங்களில் வயிற்றில் கனத்த உணர்வு, சோர்வு, அல்லது இடுப்பு மற்றும் வயிற்றுக்கிடையில் சிறிய வலி ஏற்படலாம். ஆனால் இத்தகைய அறிகுறிகள் சில சமயம் கடுமையான நோய்களுக்கான எச்சரிக்கை சிக்னலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..


இதுகுறித்து டாக்டர் ஜெய் சோக்ஷி பேசிய போது “வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ச்சியான வலி இருந்தால், அது கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.” என்று கூறினார்..

எந்த பகுதியில் வலி ஏற்படும்?

கல்லீரல் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கும் போது, நோயாளி பெரும்பாலும் வயிற்றின் மேல்புற வலது பக்கம் வலியை உணர்வார். இந்த வலி தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது இடைவிடையாக அதிகரிக்கலாம். சில நேரங்களில் இந்த வலி முதுகு அல்லது தோள்பட்டைக்கு பரவவும் கூடும்.

கல்லீரல் புற்றுநோயின் பிற அறிகுறிகள்

அடிக்கடி சோர்வு

காரணமின்றி உடல் எடை குறைதல்

உணவு ஆசை குறைதல்

மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண்கள் மஞ்சளாக மாறுதல்)

வயிற்றில் வீக்கம் அல்லது கனத்த உணர்வு

அடிக்கடி வாந்தி உணர்வு அல்லது வாந்தி

கல்லீரல் புற்றுநோய்க்கான அபாயக் காரணிகள்

நீண்டகாலமாக மது அருந்துதல்

ஹெபடிடிஸ் B மற்றும் C வைரஸ் தொற்று

கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பிரச்சனை

அதிக உடல் எடை மற்றும் சீரற்ற உணவுமுறை

புகைப்பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் வழிகள்

மது மற்றும் புகைப்பிடிப்பைத் தவிர்க்கவும்

சீரான மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்ளவும்

கல்லீரல் சோதனைகளை முறைப்படி செய்து கொள்ளவும்

ஹெபடிடிஸ் B தடுப்பூசி பெற்றிருக்க உறுதி செய்யவும்

உடல் எடையை கட்டுப்படுத்தி, தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளவும்

கல்லீரல் புற்றுநோய் கடுமையான நோயாக இருந்தாலும், அதன் அறிகுறிகளை நேரத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை சாத்தியம். வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ச்சியான வலி அல்லது மேலே கூறப்பட்ட பிற அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Read More : பெண்களே!. வேகமாக அதிகரிக்கும் தொப்பை கொழுப்பு!. மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!

RUPA

Next Post

நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. சரிவுக்கு பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ..!

Sat Nov 8 , 2025
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

You May Like