இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வீட்டை வசதியாக மாற்ற பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் நம் உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கலாம்.
ஹார்வர்டு மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்று வரும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர் டாக்டர் சேதி, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், நம் சமையலறையில் உள்ள மூன்று பொதுவான பொருட்கள் உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். அவை வாசனை மெழுகுவர்த்திகள், பிளாஸ்டிக் பலகைகள் மற்றும் கீறல் விழுந்த நான்-ஸ்டிக் பாத்திரங்கள்.
வாசனை மெழுகுவர்த்திகள் :
இவை வீடுகளில் நறுமணம் ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் கலக்கும் பித்தலேட் போன்ற இரசாயனங்கள், எரிகையில் காற்றில் கலந்து, ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன. நீண்ட கால ஒளிப்புழுக்கத்தால் சுவாச கோளாறுகள், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாற்று பரிந்துரை : இயற்கையான பீஸ்வாக்ஸ் அல்லது சாய் மெழுகுவர்த்திகளை பயன்படுத்துவது சிறந்தது.
பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள் :
அளவுக்கு மிகுந்த பயன்பாடு மற்றும் இலகுரக தன்மை காரணமாக இவை பெரும்பாலான வீடுகளில் காணப்படுகின்றன. ஆனால், வெட்டும் போது ஏற்படும் பிளாஸ்டிக் துண்டுகள் உணவுடன் கலந்து உடலுக்குள் செல்லும் அபாயம் உண்டு. மேலும், இதிலுள்ள பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு, உணவால் ஏற்படும் தொற்றுகள் போன்றவை ஏற்படக் காரணமாகின்றன.
மாற்று பரிந்துரை : மரம் அல்லது கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட வெட்டும் பலகைகள் இதற்கு சிறந்த மாற்றுகளாக கருதப்படுகின்றன.
கீறல் விழுந்த நான்-ஸ்டிக் பாத்திரங்கள் :
எண்ணெய் குறைவாகப் பயன்படுத்த முடியும் என்பதால், நான்-ஸ்டிக் பாத்திரங்கள் சமையலறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாத்திரத்தின் மேல் பூச்சில் கீறல் ஏற்பட்டால், அதிலிருந்து வெளியேறும் இரசாயனங்கள் உடலில் ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
மாற்று பரிந்துரை : ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது காஸ்ட் அயன் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகும்.
Read More : நடக்கும்போது இந்த பிரச்சனை இருக்கா..? நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இதுதான்..!! தாமதிக்காதீங்க..!!