நாம் செய்யும் சில தவறுகளால் நம் முன்னோர்களின் ஆத்மாக்களின் ஆசி கிடைக்காமல் போவதையே பித்ரு தோஷம் என்று அழைக்கிறோம். இந்த தோஷம் இருந்தால், வாழ்வில் பலவிதமான துன்பங்கள், தடைகள், பணப் பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை போன்ற சூழல் உருவாகும்.
பித்ரு தோஷம் உள்ளதா என அறிவது எப்படி..?
உங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலை சரியில்லை என்றால் பித்ரு தோஷமும், சந்திரன் சரியில்லை என்றால் மாத்ரு தோஷமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை இரண்டுமே முன்னோர்களின் ஆசி நமக்கு இல்லாமல் இருப்பதை உணர்த்தும். ஜாதகம் பார்க்காமல், கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து உங்களுக்கு பித்ரு தோஷம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சுபகாரியங்களில் தடை: திருமணம், புது வீடு கட்டுவது, குழந்தை பிறப்பு போன்ற முக்கியமான தருணங்களில் எதிர்பாராத விதமாகத் தடைகள், தாமதங்கள் ஏற்பட்டால், அது உங்களை முன்னோர்கள் நினைவுபடுத்துவதாக அர்த்தம். அவர்களின் ஆசியை நாம் பெற வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
குழந்தை பாக்கியத்தில் தடை: எவ்வளவு பிரார்த்தனைகள், பரிகாரங்கள் மற்றும் சிகிச்சைகள் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்படும். இது, முன்னோர்கள் அமைதி இல்லாமல் இருப்பதையும், அவர்களின் ஆசி இல்லாததால் குடும்ப வளர்ச்சிக்குத் தடை ஏற்படுவதையும் குறிக்கும்.
அடிக்கடி ஏற்படும் விபத்துகள்: குடும்பத்தில் ஒருவர் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது, காயங்கள் ஏற்படுவது, வாகனங்கள் அடிக்கடி பழுதடைவது ஆகியவை பித்ரு தோஷத்தின் அறிகுறிகள். முன்னோர்களின் ஆன்மாக்கள் அமைதியின்றி அலைந்து கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.
அரச மரம் முளைத்தல்: தரையில் அல்லது பூந்தொட்டியில் இல்லாமல், திடீரென வீட்டின் சுவர்களில் அரச மரம் முளைத்தால் அது தீய சக்திகள் இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. உங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும், இதனால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து வருவதையும் இது குறிக்கும்.
வேலை மற்றும் தொழில்: கடினமாக உழைத்தாலும் வேலையில் வளர்ச்சி இல்லாமல் இருப்பது, அடிக்கடி வேலை மாறுவது, அல்லது தொழிலில் எதிர்பாராத பொருளாதார இழப்புகள் ஏற்படுவது போன்றவையும் பித்ரு தோஷத்தின் அறிகுறிகளாகும். இது முன்னோர்களின் ஆசியும், ஆதரவும் இல்லாததைக் காட்டுகிறது.
பித்ரு தோஷத்திற்குத் தீர்வு
மகாளய பட்ச காலத்தில், நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது மிகவும் நல்லது. இதை முறையாக செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி, வாழ்க்கையில் அமைதியும், சுபிட்சமும் ஏற்படும். மேலும், தான தர்மங்கள் செய்து, முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யலாம்.
Read More : கடைசி 4 மாதங்களில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!. பாபா வங்கா கணிப்பு!