இந்திய தபால் துறை, பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான சேமிப்பு திட்டங்களை வழங்கும் தபால் துறை, தற்போது குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் அளிக்கும் “கிராம் சுரக்ஷா யோஜனா” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் ஒரு நாளைக்கு 50 ரூபாய் (மாதம் ரூ. 1500) சேமிப்பதன் மூலம் ரூ. 35 லட்சம் வரை பெரிய நிதியை உருவாக்க முடியும். கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் ரூ. 35 லட்சத்தையும் போனஸுடன் பெறலாம். முதலீட்டாளர் 80 வயதில் அல்லது அதற்கு முன் இறந்துவிட்டால் அந்த முதலீட்டாளரால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு (நாமினி) இந்த முழுத் தொகையும் வழங்கப்படும். 19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவொரு இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
19 வயதுடைய ஒருவர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அவர் 55 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். தினமும் ரூ.50 மட்டும் சேமித்தால் அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1,500 டெபாசிட் செய்தால் திட்டம் முதிர்ச்சியடையும் போது ரூ. 35 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
58 வயதில் முதிர்ச்சியடையும் போது உங்களுக்கு சுமார் ரூ.33.40 லட்சம் வருமானம் கிடைக்கும். 60 வயதில் முதிர்ச்சியடையும் போது உங்களுக்கு சுமார் ரூ.34.60 லட்சம் வருமானம் கிடைக்கும். மேலும், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் 80 வயதிற்குள் இறந்துவிட்டால், திட்டத்திலிருந்து பெறப்பட்ட முழு வருமானமும் அவரது நாமினிக்கு வழங்கப்படும்.