இப்போது நிதி ஒழுக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்பு மக்கள் செலவழித்த பிறகு மீதமுள்ள தொகையைச் சேமித்தார்கள். ஆனால் தற்போது, முதலில் சேமித்து வைத்து, பிறகு மீதியைச் செலவிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக பலர் ஆபத்து இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
அந்த வகையில், தபால் நிலைய நிலையான வைப்புத் திட்டம் (Post Office Fixed Deposit) சிறந்த விருப்பமாகும். இது வங்கிகளை விட அதிக வட்டி வழங்குவதுடன், பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது.
5 லட்சம் எப்படி 15 லட்சமாக மாறும்? உதாரணமாக, நீங்கள் ரூ.5,00,000 ஐ தபால் நிலையத்தில் 5 வருட நிலையான வைப்புத் திட்டத்தில் (7.5% வட்டி) முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து உங்கள் முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆகும். இந்த தொகையை எடுக்காமல், மேலும் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் வைப்பில் தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் தொகை ரூ.10,51,175 ஆகும். இதையும் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு வைப்பில் தொடர்ந்தால், மொத்தம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் தொகை ரூ.15,24,149 ஆக மாறும்.
அதாவது, ஆரம்பத்தில் போட்ட 5 லட்சம் 15 ஆண்டுகளில் ரூ.15 லட்சமாகும். இதற்கு சில விதிகள் உள்ளன. முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் தபால் அலுவலகம் 1 வருட நிரந்தர வைப்புத்தொகையை நீட்டிக்க முடியும். 2 வருட நிரந்தர வைப்புத்தொகையை 12 மாதங்களுக்குள் நீட்டிக்க வேண்டும். 3 மற்றும் 5 வருட நிரந்தர வைப்புத்தொகையை நீட்டிக்க, முதிர்வு தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தபால் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
கணக்கைத் திறக்கும் போது முதிர்வு தேதியிலிருந்து கணக்கை நீட்டிக்கக் கேட்கலாம். முதிர்வு தேதியில் வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு பொருந்தும். வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களும் நிலையான வைப்பு கணக்குகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஒரு வருட கணக்கு 6.9% வட்டியை வழங்குகிறது. இரண்டு வருட கணக்கு 7.0% வட்டியை வழங்குகிறது, மூன்று வருட கணக்கு 7.1% வட்டியை வழங்குகிறது, மற்றும் ஐந்து வருட கணக்கு 7.5% வட்டியை வழங்குகிறது.
Read more: ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா..? நீயா நானா கோபிநாத்தின் அசர வைக்கும் சொத்துமதிப்பு..!!



