பணவீக்கம் அதிகரித்திருக்கும் இக்காலத்தில், பாதுகாப்பான சேமிப்பு வழிகள் தேடும் மக்களுக்கு தபால் அலுவலகத்தின் Recurring Deposit (RD) திட்டம் ஒரு நம்பிக்கையான முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ளது. குறைந்த தொகையிலிருந்து தொடங்கக்கூடிய இந்த திட்டம், வங்கிகளுக்குச் சமமான வட்டியுடன், அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் வருவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் மாதம் ரூ.5,000 சேமிக்கத் தொடங்கினால், 5 ஆண்டுகள் முடிவில் அவருக்கு கிடைக்கும் தொகை ரூ.3,56,830. இதில் மொத்த முதலீடு ரூ.3,00,000; அதற்கே ரூ.56,830 வட்டி சேரும். ஆனால் இதே கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், மொத்த முதலீடு ரூ.6,00,000 ஆகி, அதற்கே கூடுதலாக ரூ.2,54,272 வட்டி சேர்த்து, மொத்தம் ரூ.8,54,272 பெறலாம்.
தற்போது தபால் RD திட்டத்துக்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திலும் இந்த கணக்கைத் திறக்கலாம். ரூ.100 என்ற குறைந்த தொகையிலிருந்தே முதலீடு செய்யலாம் என்பதுவே இந்தத் திட்டத்தின் சிறப்பு. முதிர்வு காலம் 5 ஆண்டுகள், ஆனால் விருப்பமிருந்தால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
சிறப்பாக, முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகள் முடிந்த பிறகு கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கும் அனுமதி உள்ளது. மேலும், ஒரு வருடம் டெபாசிட் செய்த பிறகு, சேமித்த பணத்தின் 50% வரை கடன் பெறும் வசதியும் உண்டு. ஆனால் அந்தக் கடனுக்கு RD வட்டி விகிதத்தை விட 2% அதிக வட்டி விதிக்கப்படும்.
இந்த Recurring Deposit திட்டம், சாதாரண மக்களுக்கு தினசரி வருமானத்தில் இருந்து சிறிதளவு சேமிப்பை உருவாக்கி, பெரும் நிதி இலக்கை அடைய வழிவகுக்கிறது. தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள RD, PPF, Senior Citizen Savings Scheme, Monthly Income Scheme போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் நிதி ஒழுக்கம், சேமிப்பு பழக்கம், மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஆகியவற்றை மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Read more: கோடிகளில் புரளும் அம்பானியும் அதானியும் என்ன படித்தார்கள் தெரியுமா..?