ரூ.210 செலுத்தினால் ரூ.5,000 பென்ஷன் கிடைக்கும்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால், உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்ஷன் திட்டம் உதவியாக இருக்கும்.


இத்திட்டத்தை 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இணையும் தொழிலாளர்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.5,000 பெறலாம். குறைந்தபட்ச ஓய்வுத் தொகையை பெற்றுக் கொள்வதற்கான உத்திரவாதமும் இதில் உள்ளது.

இத்திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷனை கொடுக்கிறது. பென்ஷன் வாங்கும் ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு அந்த பென்ஷன் பணம் சென்றடையும். இருவருமே இறந்து விட்டால் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட நாமினிக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவேம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைந்தால் நல்லது. இதில் மாதம் ரூ.210 முதலீடு செய்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்ஷன் பெறலாம்.

திட்டத்தில் எப்படி இணைவது..?

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அனைத்து தேசிய வங்கிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் வங்கிக் கணக்கு எந்த வங்கியில் உள்ளது என்பதை பார்வையிட்டு இந்த திட்டத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, அதனை நிரப்பி வங்கியில் சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியிலே நேரடியாக சென்று வாங்கி சமர்ப்பிக்கலாம். இதற்கு மொபைல் எண், ஆதார் அட்டை அவசியம். இந்த திட்டத்தில் சேர்வதற்கு அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்.எம்.எஸ். வரும்.

CHELLA

Next Post

பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மாதம் ரூ.30,000 சம்பளம்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Fri May 12 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைய நிர்வாகி (Centre Administrator) — சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) முதுகலை பட்டம் (Master’s Degree ) பெற்றிருக்க வேண்டும். — பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு […]
Staff 2 e1680863569579

You May Like