டிஜிட்டல் தொழில்நுட்பம் வளரும் வேகத்துக்கு இணையாக மோசடி செயல்களும் வளர்ந்து வருகின்றன. இதுபோன்ற மோசடி செயல்களில் சிக்காமல் தப்பிக்க வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சீரான இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்பி வருகின்றன. அந்த வகையில் ஹெச்டிஎப்சி வங்கி தங்களின் வாடிக்கையாளர்ளுக்கு புதிதாக ஒரு எச்சரி்க்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
APK FILE மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு HDFC எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் என்ற பெயரில் மோசடிக்காரர்கள் ஒரு APK FILE-ஐ அனுப்புவதாகவும், அதை டவுன்லோடு செய்தால் உங்களுடைய தனிப்ப்ட்ட தரவுகள் அவர்களுக்கு சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே re-KYC, Tax returns என எந்த லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் எனவும், 3ம் தர ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மோசடியாளர்கள் தேர்டுபார்டி இணையதளத்தின் மூலம் வங்கியின் இணையதளத்தைப் போல், மின்னணு இணையதளத்தைப் போல், சேர்ச்எஞ்சின் போல் உருவாக்கி மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த இணையதளங்கள் மூலம் மோசடியாளர்கள் எஸ்எம்எஸ், சமூக வலைத்தளம், மின்அஞ்சல், மெசஞ்சர்உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் லிங்குகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர்.
இவற்றைப் பார்க்கும் பெரும்பலான வங்கியிலிருந்து வந்துள்ள எஸ்எம்எஸ் என்று நினைத்து க்ளிக் செய்துவிடுவார்கள். கிளிக் செய்து சில நிமிடங்களில் அனைத்து விவரங்களையம் ஹேக்கர்கள் எடுத்து பணத்தை கணக்கிலிருந்து எடுத்துவிடுவார்கள். பல வாடிக்கையாளர்கள் அந்த லிங்க் எங்கிருந்து வந்துள்ளது, யுஆர்எல் என்ன, பிஎன் எண் கேட்கிறதா, ஓடிபி கேட்கிறதா என்று அறியாமல் கிளிக் செய்து சிக்கிக்கொள்கின்றனர்.
Read more: செம வாய்ப்பு..! மாணவர்கள் பள்ளியிலே ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு…! முழு விவரம்