இந்திய தபால் துறை பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமானதும், அதிக நம்பகத்தன்மை பெற்றதும் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டமாகும். இந்தத் திட்டம் சிறிய அளவு பணத்திலிருந்தே தொடங்கக்கூடியது என்பதால், சாதாரண மக்கள் கூட இதில் ஈடுபட முடிகிறது. தற்போது தபால் நிலையங்களில் RD திட்டத்திற்கு வருடத்திற்கு 6.7% வட்டி (காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி) வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.100 முதலீடு செய்தால் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. தனிநபர் பெயரில் மட்டுமின்றி, கூட்டு கணக்காகவும் தொடங்கலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்குவதற்கான வசதி உள்ளது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.
தேவையெனில், முடிவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கலாம். மேலும், 1 ஆண்டு நிறைவடைந்த RD கணக்குகளில், டெபாசிட் செய்திருக்கும் தொகையின் 50% வரை கடன் பெறும் வசதியும் உள்ளது. முதலீட்டு தொகை அதிகமாக இருந்தால், அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும். உதாரணமாக,
* மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.60,000 ஆகும். இதற்கான வட்டி சுமார் ரூ.11,366 கிடைத்து, முதிர்வு காலத்தில் மொத்தம் ₹71,366 பெறலாம்.
* மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.1,20,000 முதலீடு செய்வீர்கள். வட்டி சுமார் ரூ.22,732, அதனால் மொத்தம் ரூ.1,42,732 கிடைக்கும்.
* மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.3,00,000 முதலீடு செய்வீர்கள். வட்டி சுமார் ரூ.56,830, அதனால் மொத்தம் ரூ.3,56,830 கிடைக்கும்.
இவ்வாறு, முதலீட்டை எவ்வளவு அதிகமாகச் செய்வீர்களோ, அதற்கேற்ப முதிர்வில் கிடைக்கும் வருமானமும் அதிகமாகும். மொத்தத்தில், தபால் துறையின் RD திட்டம், சிறிய அளவில் தொடங்கக்கூடியது, பாதுகாப்பானது, மேலும் நிச்சயமான வட்டி வருமானத்தை வழங்கக்கூடிய ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும்.
Read more: சம்மதத்துடன் கூடிய உடலுறவு பாலியல் வன்கொடுமை அல்ல.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!



