சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால்.. ஒவ்வொரு வாரமும் உங்கள் உடலில் என்ன நடக்கும்..? நம்ப முடியாத மாற்றம்..!!

Sugar 2025

நம்மைச் சுற்றிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், இனிப்புச் சேர்க்கப்பட்ட பானங்களும் நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், டயட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நீக்குவது ஒரு சவாலான காரியம். எனினும், ஒரு மாத காலத்திற்கு சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.


முதல் வாரம் :

குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் துஷார் தயால், சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தியா டுடே-வுக்குப் பேட்டி அளித்துள்ளார். சர்க்கரையை நிறுத்திய முதல் சில நாட்களில், எரிச்சல், சோர்வு, பதட்டம் அல்லது ஆற்றல் குறைவு ஆகியவை ஏற்படலாம். ஏனெனில், மூளைக்கு சர்க்கரை வழியாகக் கிடைத்த டோபமைன் (Dopamine) சத்து கிடைக்காமல் போவதே இதற்குக் காரணம். இருப்பினும், இந்த ஆரம்பகால அசௌகரியத்தை தாண்டிச் செல்வது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இரண்டாவது வாரம் :

சர்க்கரையை நீக்கிய இரண்டாவது வாரத்தில், ரத்த சர்க்கரை அளவுகள் நிலைப்படுத்த தொடங்குகின்றன. இதனால் திடீரென ஏற்படும் ஆற்றல் வீழ்ச்சிகள் மற்றும் பசி அதிகரிப்பது குறைகிறது. இன்சுலின் உணர்திறன் மேம்படத் தொடங்குவதால், உடல் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது. இதுவே ஆரம்பகால எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

மூன்றாவது வாரம் மற்றும் அதற்கு மேல் :

மூன்றாவது வாரத்திலும் அதற்குப் பிறகும் சர்க்கரையைத் தவிர்க்கும்போது, சருமத்தில் வீக்கம் குறைந்து, பருக்கள் அல்லது வெடிப்புகள் குறைந்து தெளிவான சருமம் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை வீக்கத்தை அதிகரிப்பதால் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதாவதற்கு பங்களிக்கக்கூடும். கலோரி உட்கொள்ளல் குறைந்து, இன்சுலின் நிலைபெறுவதால், அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நிலைகளின் அபாயமும் குறைகிறது.

சர்க்கரையை நீக்குவது என்பது இனிப்புகள் மட்டுமல்லாமல், கெட்ச்அப், பிரெட், சாஸ்கள் போன்ற மறைமுகமாகச் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பதாகும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக பழங்கள், நட்ஸ், தயிர் சார்ந்த ஸ்மூத்திகள் மற்றும் பால் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த மாற்று உணவுகளை மக்கள் நாடுகிறார்கள். இது நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இலவங்கப்பட்டை, ஏலக்காய், வெண்ணிலா போன்ற மசாலாப் பொருட்களைப் பயன்படுத்திச் சர்க்கரை சேர்க்காமல் உணவுகளில் இனிப்புச் சுவையை மேம்படுத்தலாம் என்று டாக்டர் துஷார் தயால் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More : மக்களே..!! 2026 பொங்கல் பரிசு என்ன தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் ஆர்.காந்தி..!!

CHELLA

Next Post

தம்பதிகளே..!! படுக்கையறையில் உங்கள் துணையுடன் இப்படி தூங்குறீங்களா..? உஷார்..!!

Sat Nov 1 , 2025
திருமணம் முடிந்த ஆரம்ப காலங்களில் கணவன் – மனைவி இருவரும் நெருக்கமாக உறங்குவது இயல்பு. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வேலையின் சுமை, மன அழுத்தம், அல்லது சில அற்ப காரணங்களுக்காக தம்பதிகள் படுக்கை அறையில் இடைவெளி விட்டு, அல்லது தனித்தனி படுக்கைகளில் தூங்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். இந்தச் சிறிய இடைவெளி நாளடைவில் கணவன்-மனைவி உறவில் என்னென்ன கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் […]
Sleeping 2025

You May Like