மகாராஷ்டிராவைத் தொட முயற்சி செய்ததால் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசு, தொடக்கப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெற்றதைக் கொண்டாடும் வகையில் மும்பையில் மும்பையில் நடைபெற்ற “மெகா வெற்றிக் கூட்டத்தில்” ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டனர்.. இதன் மூலம் 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே இந்த விழாவில் பேசிய போது, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை கிண்டல் செய்தார், சிவசேனா நிறுவனருமான பால் தாக்கரேவால் கூட “செய்ய முடியாததை” ஃபட்னாவிஸ் செய்துவிட்டதாக கூறினார்.
“ஃபட்னாவிஸ், என்னையும் உத்தவையும் ஒன்றாக கொண்டு வந்தார். பாலாசாகேப் தாக்கரேவால் செய்ய முடியாததை முதல்வர் ஃபட்னாவிஸ் செய்துவிட்டார்..” என்று தெரிவித்தார்.
ராஜ் தாக்கரே கடைசியாக 2005 இல் உத்தவ் தாக்கரே உடன் பொது மேடையில் கலந்து கொண்டார். பின்னர் அதே ஆண்டில் அவர் சிவசேனாவை விட்டு வெளியேறி 2006 இல் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை உருவாக்கினார்.
“உங்களுக்கு விதான் பவனில் அதிகாரம் இருக்கலாம், சாலைகளில் எங்களுக்கு அதிகாரம் உள்ளது.. மராத்தி மக்கள் காட்டிய வலுவான ஒற்றுமை காரணமாக, மகாராஷ்டிரா அரசு மும்மொழி ஃபார்முலா குறித்த முடிவை பின்வாங்கியது..
மகாராஷ்டிராவைத் தொட முயற்சி செய்ததால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்,” என்று அவர் மேலும் எச்சரித்தார். மும்மொழி ஃபார்முலா குறித்த முடிவு “மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கும் திட்டத்திற்கு முன்னோடி” என்று ராஜ் தாக்கரே கூறினார்.
ராஜ் தாக்கரேயுடனான மறு இணைவு பற்றிப் பேசிய உத்தவ் தாக்கரே, “ஒன்று தெளிவாகிறது, எங்களுக்கு இடையேயான தூரத்தை நாங்கள் நீக்கிவிட்டோம்.. ஆனால் என் பார்வையில், நாங்கள் இருவரும் ஒன்றாக வருகிறோம், இந்த மேடை எங்கள் உரைகளை விட முக்கியமானது. ராஜ் ஏற்கனவே மிகச் சிறந்த உரையை நிகழ்த்தியுள்ளார், இப்போது நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.. அரசாங்கம் மராத்தியர்கள் மீது இந்தியைத் திணிக்க விடமாட்டேன்” என்ம் கூறினார்.” என்று தெரிவித்தார்.
ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை திரு. ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு ஏப்ரல் 16 அன்று பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஜூன் 17 அன்று அரசாங்கம் இந்தியை விருப்ப மொழியாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : IRCTC-ன் ராமாயண யாத்திரை.. 17 நாட்கள்.. ராமர் தொடர்பான 30 இடங்கள்.. டிக்கெட் எவ்வளவு?