மலேசியாவில், தனது காதலன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஆத்திரமடைந்த 34 வயது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டித் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் பழகி வந்துள்ளார். ஆனால், பூபேஸ் தனது திருமணத்தை மறைத்து தஸ்லீமாவுடன் உறவு வைத்திருந்ததுடன், வங்கதேசத்தில் உள்ள தனது மனைவியுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த ரகசியம் தஸ்லீமாவுக்கு தெரியவந்ததும், அவரைப் பழிவாங்க ரகசிய திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது, தஸ்லீமா மிக கனிவாகப் பேசி, பூபேஸிடம் அவரது திருமண உண்மையை உறுதிப்படுத்தினார். பூபேஸும், “தவறாக நினைக்காதே, எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நீ ஒத்துக்கொண்டால் மனைவியை விவாகரத்து செய்து விடுகிறேன்” என்று பதிலளித்துள்ளார். இந்த உண்மையை அறிந்த தஸ்லீமா, தனது திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினார்.
இருவரும் உல்லாசமாக இருந்தபோது, “நானே ஆணுறை மாட்டிவிடுகிறேன்” என்று கூறி, பூபேஸின் கண்களை ஒரு துணியால் கட்டியுள்ளார். அடுத்த நொடியே, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார். “ஊரில் மனைவியுடன் பேசி என்னை ஏமாற்ற உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று ஆக்ரோஷமாகக் கத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பூபேஸ், மயங்கிய நிலையிலேயே ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சுயநினைவு திரும்பிய பின் பூபேஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கி தஸ்லீமாவைக் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.