கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் தாயார் காடாம்புலியூரைச் சேர்ந்த ரவுடி ராம் குமாரை அணுகியுள்ளார்.
இந்த சந்திப்பு, ராம் குமாருக்கும் மகேஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மனைவியின் கள்ளக்காதல் செந்தில்வேலுக்குத் தெரியவந்தும், மகேஸ்வரி அதைப் பொருட்படுத்தவில்லை. மேலும், அவர் உடை மாற்றும் வீடியோக்கள், அந்தரங்க உடல் உறுப்புகளின் காட்சிகள் மற்றும் ஆடையின்றி நடனமாடும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ராம் குமாருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
குழந்தைகளும் இதை கண்டதால், செந்தில்வேல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். கொலை நடந்த நாளுக்கு முந்தைய நாள், திருமண நாள் அன்று கூட மகேஸ்வரி ராம் குமாருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதால், கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, மகேஸ்வரி செந்தில்வேலை உதாசீனப்படுத்தியதால், ஆத்திரம் அடைந்த அவர், மனைவி தூங்கும்போது தலையில் குளவி கல் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியைக் கொன்றபின், குழந்தைகளைத் தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற செந்தில்வேலை, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் போலீசார் விரைந்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.