இந்திய திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ‘பாகுபலி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த திரைப்படம் வரலாற்று கதை அல்ல, இந்திய சினிமாவை முழுமையாக மாற்றியமைத்த நிகழ்வாக மாறியது. பான்-இந்தியா (Pan-India) என்ற வார்த்தைக்கு உண்மையான வரையறையை அளித்தது இந்த படம். தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியீடப்பட்ட இந்தப்படம், இந்திய சினிமாவின் சர்வதேச சித்திரத்தை உயர்த்தியது. மேலும் உலக அளவில் அதிக வசூல் செய்த முதல் இந்தியப் படமாகும். பாகுபலி எனும் பெயர் இன்று மனிதர்கள் மத்தியில் ஒரு உணர்வாகவே உள்ளது.
வெறும் கதைக்களம் மட்டுமின்றி, திறமையான நடிகர்கள், தெளிவான நுணுக்கங்கள், பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட காட்சிகள் ஆகியவை இந்தப் படத்தை நினைவில் நிறைந்த ஒன்றாக மாற்றின. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இந்திய சினிமாவின் எல்லைகளை தாண்டி உலகத் தரத்தில் படத்தை கொண்டு சென்றார்.
பாகுபலி’ திரைப்படத்தின் முக்கிய வில்லனான பல்லவதேவனின் கதை, அதாவது ரானா டகுபதியின் வாழ்க்கை கதையை பற்றி அவரே மனம் திறந்து பேசியுள்ளார். . ராணா டகுபதியின் வாழ்க்கை பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது, அவற்றை அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டார். தனது அற்புதமான நடிப்பால் மக்களின் இதயங்களில் முத்திரை பதித்த நடிகர், நிஜ வாழ்க்கையிலும் தனது அனுபவங்களால் மக்களின் இதயங்களை வென்றார். நடிகர் சிறுவயதிலிருந்தே பல உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். அவரது உடலில் பல மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன, இதை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
ராணா டகுபதியின் கண்களுக்கு என்ன ஆனது? தேசிய திரைப்பட விருது பெற்றவரும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான இவர், தனது வலது கண்ணில் பார்வை இல்லை என்றும், இடது கண்ணில் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருமுறை தெரிவித்தார். இந்த அறுவை சிகிச்சை ஹைதராபாத்தில் உள்ள எல்வி பிரசாத் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அவருக்கு 14 வயதாக இருந்தபோது அவரது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அது தோல்வியடைந்தது. இந்த மருத்துவ சவால்கள் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து அதிரடி வேடங்களில் நடிக்கிறார், பெரும்பாலும் நான் ஒரு “டெர்மினேட்டர்” போல உணர்கிறேன் என்று பேசியுள்ளார்.
மேலும், என்னுடைய இந்தக் கண்கள் பல ஆண்டுகளாக நகைச்சுவையாக மாறிவிட்டன. ஒரு பக்கத்திலிருந்து என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அது மிகவும் வேடிக்கையாகிறது. நான் லென்ஸ்கள் அணியவில்லை என்றால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று கூறியுள்ளார். கார்னியல் மற்றும் சிறுநீரகம் ஆகிய 2 மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, அவர் ஒரு ‘டெர்மினேட்டர்’ போல் உணர்கிறார் என்றும் அவர் கூறினார். “நான் இன்னும் பிழைத்துக்கொண்டிருக்கிறேன், என்பதே பெரிய உத்வேகம். இன்னும் தொடர்ந்து செல்ல வேண்டும்” என்று கூறினார்.
அர்ஜுன் ராம்பாலுடன் பணிபுரிந்த ஒரு நிகழ்வையும் டகுபதி பகிர்ந்து கொண்டார். “ஒரு டேக்கின் போது, அர்ஜுன் தொடர்ந்து என்னைப் பார்த்து நான் அழுகிறேனா என்று கேட்டுக்கொண்டிருந்தார். நான், ‘இல்லை தம்பி, வெறும் தண்ணீர் தான், கண்ணில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது’ என்றேன். ஆனால் நான் ஏன் அழுகிறேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தார் என்றும் ராணா கூறினார்.
Readmore: மகிழ்ச்சி செய்தி…! விவசாயிகள் செப்டம்பர் மாதம் வரை பயிர் காப்பீடு செய்யலாம்…! முழு விவரம்