கள்ளக்காதலிக்காக கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித். இவர், சஞ்சு சைனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் ரோஹித்தின் மனைவி சஞ்சு சைனிக்கு தெரியவந்த நிலையில், அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக ரோஹித் நினைத்துள்ளார். இதற்கிடையே, இம்மாதம் 10ஆம் தேதி சஞ்சு சைனி சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சஞ்சு சைனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, கணவர் ரோஹித் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.
இருப்பினும், “திடீரென வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டதாக” போலீசாரை நம்ப வைக்க முயன்றார். ஆனால், போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் தனது கள்ளக்காதலியின் தூண்டுதலின்பேரில் மனைவியை கொலை செய்ததாக ரோஹித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மனைவியை கொலை செய்த ரோஹித் மற்றும் அவரது கள்ளக்காதலி ரிது சைனி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.