“நான் அந்த மாதிரி பொண்ணு இல்லைங்க”..!! பொண்டாட்டி மீது வந்த சந்தேகம்..!! பீர் பாட்டிலால் நண்பனின் மண்டையை உடைத்த கணவன்..!!

Crime 2025 1

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பிரிசிலாவின் தாய் மாமன் மகன் பிரேம் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, பிரேம் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.


பிரேம் பங்களா வாங்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் ஒரு பங்களா விற்க வருவதை அறிந்த குழந்தை இயேசு, அந்தத் தகவலை பிரேமுக்குத் தெரிவிக்க அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், பிரேம் போன் எடுக்கவில்லை. பின்னர், ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, பிரேமின் மனைவி போனை எடுத்து, அவர் வேலைக்குச் சென்றுள்ளதாகவும், பிறகு பிரேமின் பிள்ளைகள் உறவினர் என்ற முறையில் குழந்தை இயேசுவுடன் வீடியோ காலில் பேசியுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும், பிரேம் மனம் முழுக்கத் தவறாகப் பதிய காரணமாகின. தன் மனைவி மற்றும் குழந்தை இயேசு இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த பிரேம், முதலில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பிறகு வழக்கம் போல மது அருந்த வேண்டும் என்று கூறி குழந்தை இயேசுவை அழைத்த பிரேம், இருவரும் தனியாக ஒன்றாக மது அருந்தியபோது, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த பிரேம், “என் பொண்டாட்டி கூட பேச நீ யாருடா?” என்று கேட்டு, ஆவேசத்துடன் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்துக் குழந்தை இயேசுவைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை இயேசுவை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பிரேமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Read More : இந்த பிரச்சனை இருப்பவர்கள் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா..? வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்..? மருத்துவர் விளக்கம்..!!

CHELLA

Next Post

“தனிக்கட்சி தொடங்கினாலும் பாஜகவுடன் தான் கூட்டணி”..!! அமித்ஷா + ஓபிஎஸ் சந்திப்பில் நடந்தது என்ன..?

Wed Dec 3 , 2025
தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் திடீரெனச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் […]
Amitsha Ops 2025

You May Like