“டாய்லெட் கழுவ கூட ரெடி.. ப்ளீஸ் உதவுங்க..!!” வறுமையின் பிடியில் வாழும் கவுண்டமணி பட நடிகை.. கண்ணீர் மல்க வேண்டுகோள்

Actress Vasuki

திரைப்பட நடிகர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் தற்போது வருமானம் இல்லாமல் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் இதன் மறுபக்கம். பெரும்பாலம் துணை நடிகை, நடிகர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது.


அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து கூட்டல் பெருக்கல் சொல்லித் தரும் கணக்கு டீச்சர் ஆகவும் பிச்சைக்காரியாக வரும் காமெடியின் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் காமெடி நடிகையாக வலம்வந்தாலும் அதிகம் புகழ்பெற்றது தெலுங்கு சினிமாவில்தான். மோகன் பாபு நடித்த அசெம்ப்ளி ரவுடி படத்தில் தெலுங்கில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பின் ரவுடி காரி பெல்லம், மாமா கரு, ரவுடி இன்ஸ்பெக்டர், சித்தெம்மா மொகுடு, பிரம்மா, பெடராயுடு, ரவுடி எம்.எல்.ஏ, அம்மா ராஜினாமா, சீதரத்தினம் கேரி அப்பாய்யா, அன்னமய்யா என பல வெற்றிப் படங்களில் நடித்து பாகீசா வாசுகியாக தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த வாசுகி ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். ராஜ்குமார் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாசுகிக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவர் குடிக்கு அடிமையானதோடு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே தந்தையை இழந்த நிலையில், தாயும் புற்று நோய் பாதிக்கப்பாடு உயிரிழந்தார்.

அதன் பிறகு வாசுகி வயிற்றில் மூன்று கட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இருந்த கொஞ்சம் பணம் மற்றும் நகைகளை தன்னுடைய மருத்துவ செலவுக்காக செலவிட வறுமையின் பிடியில் வாசுகி சிக்கினார். இதனால் உதவி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பலரிட உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். டாய்லெட் கழுவ கூட தயாரா இருக்கேன்.. ஆனால் எனக்கு வேலை தர யாரும் தயாராக இல்லை என்றும் இதனால் பிச்சை எடுக்க கூட தயாராக இருப்பதாக நடிகை வாசுகி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Read more: ஷாக் நியூஸ்.. Ola, Uber-ல் இனி எகிறப்போகும் கட்டணம்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு.. முழு விவரம் இதோ..

Next Post

“தைரியமா இருங்கமா.. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அதிமுக துணை நிற்கும்..” அஜித்தின் குடும்பத்திற்கு EPS ஆறுதல்.. வீடியோ..

Wed Jul 2 , 2025
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை […]
c3ed3e1905e1234fc02903e7c96213e5 1

You May Like