“எல்லாம் நான் பாத்துக்குறேன்.. என்கூட உல்லாசமா இரு”..!! 23 வயது இளம்பெண் செய்த தரமான சம்பவம்..!! கதிகலங்கிய 68 வயது வக்கீல்..?

Sex 2025 1

சென்னையில் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கணவரின் வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு ஞானபிரகாஷ் (68) என்பவர் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளார்.


“உன் பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன், என்னுடன் லாட்ஜுக்கு வந்து தங்கு” என்று ஆபாசமாக பேசிய அந்த முதியவர், அப்பெண்ணை சங்கீதா ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த நபர் தவறான நோக்கத்தில் அழைப்பதை உணர்ந்த இளம்பெண், சாதுர்யமாக செயல்பட்டுத் தனது உறவினர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் மட்டும் தனியாக வந்ததாக நினைத்து, “உனக்கு என்ன வேண்டும்?” என்று ரொமான்டிக் பார்வையில் குஷியாக பேசிய முதியவரை, மறைந்திருந்த உறவினர்கள் சுற்றி வளைத்துச் சரமாரியாகத் தாக்கினர்.

ஹோட்டலில் நடந்த இந்த தாக்குதலில் நிலைகுலைந்த முதியவரை உறவினர்கள் செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், வழக்கறிஞர் என்று பொய் கூறி ஏமாற்றியதும் அம்பலமானது. ஒரு பெண்ணின் குடும்பப் பிரச்சனையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதற்காக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : ரூ.5,000 உரிமைத்தொகை..!! காட்டுத் தீயாய் பரவிய வதந்தி..!! வங்கி, ஏடிஎம்களில் அலைமோதிய கூட்டம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்..!!

CHELLA

Next Post

ஹேய் மாமியார்.. உன் மேல எனக்கு ரொம்ப நாளா ஆசை..!! பொண்டாட்டி வீட்டில் இல்லாதபோது கணவன் செய்த பயங்கரம்..!! ஷாக்கான மகள்..!!

Sat Feb 14 , 2026
தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கல்வகுர்த்தி பகுதியில், 60 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் இளைய மகளை, அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மா (40) என்பவர் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த நரசிம்மா, நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். போதையில் மனைவியை சித்திரவதை செய்ததால், பொறுக்க முடியாமல் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் […]
rape 1

You May Like