செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து, உலக பணக்காரர் எலான் மஸ்க் அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள், உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. கடின உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த பணிகளை ரோபோக்களே கையாளும்.
இந்த மாற்றத்தின் விளைவாக, பணம் அதன் மதிப்பை இழக்கும் என்றும், பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும் என்றும் மஸ்க் நம்புகிறார். வேலை என்பது கட்டாயத் தேவையாக இல்லாமல், மக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது போல, ஒரு விருப்பமான செயலாக மட்டுமே மாறும். தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவமைப்பாளர்கள் கூட, காலப்போக்கில் தாங்கள் உருவாக்கிய ரோபோக்களால் பணியை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
மக்களின் தேவைகள் அனைத்தையும் ரோபோக்கள் பூர்த்தி செய்வதால், மனிதர்கள் தங்கள் அன்றாட கவலைகள் இன்றி மகிழ்ச்சியாக ஓய்வெடுக்க முடியும் என்றும் அவர் இந்த புதிய சகாப்தத்தை பற்றி விவரிக்கிறார். மஸ்கின் இந்த கணிப்பு, தொழிலாளர் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்துப் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
Read More : வெள்ளியில் முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்..!! 2026இல் விலை எப்படி இருக்கப் போகுது தெரியுமா..?



