டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.. அதன்படி, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்த மதுபான பாட்டில் வாங்கிவிட்டு காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது..
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலி மது பாட்டிலகளை திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது.. வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது..
அந்த வகையில் தற்போது சென்னையில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை முதல் காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் ரூ.10 தரப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு பாட்டில்களை பொது இடங்களில் தூக்கி வீசுவதை தடுக்கும் பொருட்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.. மது பாட்டில்களை வாங்கும் போது பாட்டிலுக்கு தலா ரூ.10 கூடுதலாக பெறப்படும்.. காலி பாட்டில்களை திரும்ப தரும் போது அந்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Flash : இன்று ஒரே நாளில் 2 முறை உயர்வு..! எவ்வளவு தெரியுமா? மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!



