பராசக்தி படத்தில் 25 இடங்களில் சென்சார் கட்..! இந்தி திணிப்பு, பேரறிஞர் அண்ணா தொடர்பான வசனங்கள் நீக்கம்..!

parasakthi 1

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஜனநாயகன் படத்தை போலவே பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.


தணிக்கை சான்றிதழுக்காக இந்த படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்த படத்திற்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த படத்தை மறு ஆய்வுக்கும் சென்சார் போர்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.. இதனால் பராசக்தி படம் வெளியாகுமா என்பதில் குழப்பம் நீடித்தது..

இந்த நிலையில் இன்று பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கியது.. U/A சான்றிதழ் கிடைத்துள்ளதால் இந்த படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது..

இந்த நிலையில் பராசக்தி திரைப்படத்தில் 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 11 இடங்களில் வார்த்தைகளை மியூட் செய்த பின்னரும் 14 இடங்களில் காட்சிகளில் கட் செய்த பின்னரே படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.. 25 இடங்களில் சென்சார் கட் செய்டஹ் பின்னர் பராசக்தி படத்தின் நீளம் 3 மணி நேரம் 5 நிமிடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

சென்சார் கட்டிற்கு பிறகு பராசக்தி படத்தில் இந்தி திணிப்பு தொடர்பான சில குறிப்பிட்ட வசனங்கள் மற்றும் வாசகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.. மேலும் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் மற்றும் குறிப்பிட்ட சாதியை குறிக்கும் வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன.

இந்தி அரக்கி என்ற வார்த்தையும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. அதே போல் இந்தி என் கனவை அழித்தது என்ற வசனத்தையும் தணிக்கை வாரியம் நீக்கி உள்ளது.. எனது ஒரே கனவையும் இந்தி திணிப்பு எரித்தது என்ற வாசகமும் நீக்கப்பட்டுள்ளது.. மொழித் திணிப்பதால் ஏற்படும் பிரிவினையை குறித்த பின்னணிக் குரல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

பேரறிஞர் அண்ணாவின் முழக்கம் தொடர்பான வாசகத்தையும் தணிக்கை வாரியம் நீக்கி உள்ளது.. அதே போல் பராசக்தி படத்தில் தற்கொலை முயற்சி சார்ந்த காட்சிகள் 50% குறைக்கப்பட்டுள்ளன.. ஒரு கிராமமே சூறையாடப்படுவது போன்ற காட்சி 50% ஆக குறைக்கப்பட்டது..

குழந்தையுடன் இருக்கும் தாயை சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. தீ பரவட்டும் என்ற வாசகத்திற்கு பதில் நீதி பரவட்டும் என்ற வாசகத்தை மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. மேலும் கெட்ட வார்த்தைகளும் மியூட் செய்யப்பட்டுள்ளன..

சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : வா வாத்தியார் பட உரிமைகளை ஏலத்தில் விட உயர்நீதிமன்றம் உத்தரவு.. அதிர்ச்சியில் படக்குழு..!

RUPA

Next Post

“ஜெயலலிதாவிடம் கைகட்டி தானே நின்றார்.. சென்சார் போர்டு அரசியல் செய்யல..” சரத்குமார் ஆவேசம்..!

Fri Jan 9 , 2026
இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.. இதுகுறித்து தவெகவினரோ அல்லது விஜய்யோ பாஜகவை எதிர்த்தோ அல்லது கண்டித்தோ எந்த அறிக்கையும் வெளியிட […]
vijay sarathkumar

You May Like