உத்தரபிரதேச மாநில காவல்துறையை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே உதாரணமாக உள்ளது.
2017-ஆம் வருடத்திற்கு முன்பு வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் பற்றி விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றார்.