வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு சுமார் 3 கிலோமீட்டர் வேகத்தில் தெற்கு–தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேலும், அடுத்த 6 மணி நேரத்தில் இது மேலும் வலுவிழந்து சாதாரண காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: ஒரு லிட்டர் ஆவின் நெய் எவ்வளவு தெரியுமா..? அதிரடியாக உயர்ந்த விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!



