வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறான வரி விலக்கு கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
வருமான வரித் துறை, பொது மக்களுக்காக சட்டவிரோதமாக தவறான வரி விலக்குகள் மற்றும் கோரிக்கைகளைத் தாக்கல் செய்த முகவர்களின் ஒரு வலையமைப்பைக் கண்டறிந்துள்ளது. இந்த நெட்வொர்க்கில் சிலர் இந்தியா முழுவதும் செயல்படும் மோசடி வலையமைப்புகளை உருவாக்கினர். இவர்களின் முகவர்கள், அதிகமான அல்லது முற்றிலும் போலியான கழிவுகள் காட்டி வருமான வரி அறிக்கைகள் (ITR) தாக்கல் செய்தனர். பின்னர் அதற்குப் பதிலாக கமிஷன் பெற்றனர்.
இவ்வாறு பெற்ற பல சட்டவிரோத வரி திருப்பிச் செலுத்தல்கள் (refunds) அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியதாகக் காட்டப்பட்ட போலி நன்கொடைகளுடன் தொடர்புடையவை என தெரியவந்தது.
வருமான வரித்துறையின் நடவடிக்கை
துருவா அட்வைசர்ஸ் நிறுவனத்தின் கூட்டாளி சந்தீப் பல்லா பேசிய போது “ வருமான வரித்துறை மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் AI அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை பயன்படுத்தி வழக்கத்திற்கு மாறான பிடித்தக் கோரிக்கைகள், சந்தேகத்திற்குரிய திருப்பிச் செலுத்தல்கள் ஆகியவற்றை கண்டறிகிறது என்றார்.
மேலும் “ மூன்றாம் தரப்பு ஆதாரங்களின் மூலம் கோரிக்கைகள் சரிபார்க்கப்படுகின்றன. வங்கி பதிவுகள், டிரஸ்ட் (Trust) தாக்கல்கள், AIS / Form 26AS விவரங்கள், நிதி பரிவர்த்தனைகள், பான் எண் அடிப்படையிலான தரவுத்தளங்கள் ஆகியவை சரிபார்க்கப்படுகின்றன..
எங்கு வேறுபாடுகள் அல்லது மோசடி சான்றுகள் கிடைக்கிறதோ அங்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 132, பிரிவு 133A ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் போலி நன்கொடை ரசீதுகள், ஹவாலா வழியாக சுழற்றப்பட்ட பணம், உண்மையற்ற CSR செலவுகள்
போன்ற குற்றச்சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன..” என சந்தீப் பல்லா தெரிவித்துள்ளார்.
போலி வரி திட்டமிடல் மீது CBDT கடும் நடவடிக்கை
சமீப காலமாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிடும் அறிவுறுத்தல்கள், செயற்கையான வரி திட்டமிடல் (Artificial Tax Planning) மற்றும் போலி கழிவு கோரிக்கைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு உறுதியாக இருப்பதை காட்டுகின்றன.
மேம்பட்ட தரவு பகுப்பாய்வு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு, மற்றும் கடுமையான தண்டனை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த முறையில் பயன்படுத்தி வரி மோசடிகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சூழலில், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் விளைவுகள், நிறுவனங்களின் நம்பகத்தன்மை, கடன் மதிப்பீடு மற்றும் வணிக நிலை மீது இதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் தொழில் துறையினருக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
என்ன தண்டனை?
போலி கழிவு கோரிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை உடனடியாக நிராகரிக்கப்படும்.. மேலும் செலுத்த வேண்டிய வரி தொகை, அதற்கான வட்டி, வரி தொகையின் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம். இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 270A-ன் கீழ், தவறான தகவல் அளித்தல் (Misreporting) மற்றும் சட்டவிரோத திருப்பிச் செலுத்தல் (Refund) காரணமாக விதிக்கப்படுகிறது.
வருமான வரி சோதனை அல்லது பிற அமலாக்க நடவடிக்கைகளில் பணம் மறைமுகமாக மீண்டும் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் கிடைத்தால், அந்த தொகை: வருமான வரிச் சட்டம் பிரிவு 69A-ன் கீழ் விளக்கமற்ற பணம் என கருதப்படும். அந்த தொகைக்கு 78% வரை வரி விதிக்கப்படலாம்.. மேலும் , பிரிவு 271AAC-ன் கீழ் 10% அபராதம் விதிக்கப்படும்.. கடுமையான வழக்குகளில் சிறை தண்டனை வரை கிடைக்கும்.
திட்டமிட்ட வரி ஏமாற்றம் நிரூபிக்கப்பட்டால், வருமான வரித்துறை மீள் மதிப்பீடு (Reassessment) நடவடிக்கைகள். குற்றவியல் வழக்கு (Criminal Prosecution)
தொடங்கலாம். சிறை தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலி கழிவுகள், தவறான நன்கொடை கோரிக்கைகள் போன்ற வரி மோசடிகளில் ஈடுபட்டால், அது நிதி இழப்பு, சட்ட சிக்கல், மற்றும் வணிக நம்பகத்தன்மை வீழ்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்..
Read More: ஓய்வூதியம் ரூ. 10,000 ஆக உயர்த்தப்படுமா? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.!



