தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அண்டை மாநிலங்களான புதுச்சேரியில் ரூ.4800, தெலங்கானாவில் ரூ.4000, ஆந்திராவில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000, வீட்டை விட்டு வெளியே நடமாட இயலாத கடும் ஊனமுற்றோருக்கு ரூ.15,000 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதந்திர உதவித் தொகை ரூ.1500 ஆகவே இருந்து வந்தது. அண்டை மாநிலங்களில் அதிகமாக உள்ள நிலையில், அதேபோல தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகள் எழுந்தது.
அதை தொடர்ந்து சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள், மகன் திருமணத்துக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குக்கு அளிக்கப்படும் உதவித்தொகை ரூ.17,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று திறனாளிகளின் மகள், மகன் திருமணத்துக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
Read more: அன்-ரிசர்வ் டிக்கெட் எடுத்து ரயிலை மிஸ் பண்ணிட்டீங்களா..? உடனே இத செய்ங்க..