IND VS AUS T20!. சூர்யகுமார் யாதவின் கேட்சை பிடித்த டிம் டேவிட்!. அருவருப்பான செயலால் ரசிகர்கள் கொந்தளிப்பு!. வைரல் வீடியோ!.

tim david suryakumar yadav catch

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் டி20 போட்டிகள் துவங்கியுள்ளன. அதன் படி முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.


இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று ஹெரிடேஜ் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா – சுப்மன் கில் ஜோடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆஸ்திரேலிய பவுலர்களை திணறடித்தனர். பவர் பிளே வரை ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடியை, ஆடம் ஜாம்பா தனது சுழலில் சிக்க வைத்தார். அவரது பந்தை விரட்ட நினைத்த அபிஷேக் சர்மா 21 ரன்னில் அவுட் ஆனார்.

இதன்பிறகு களம் புகுந்த சிவம் துபே, சுப்மன் கில்லுடன் ஜோடி அமைத்தார். இருவரும் அதிரடியாக மட்டையைச் சுழற்றினர். இதில் மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினார். குறிப்பாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனிடையே, தொடக்கம் முதல் அதிரடி காட்டி வந்த கில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதேபோல் களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா (5 ரன்), ஜிதேஷ் சர்மா (3 ரன்), வாஷிங்டன் சுந்தர் (12 ரன்), அர்ஷ்தீப் சிங் (0) போன்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை சிதற விட்ட அக்சர் படேல் 21 ரன்கள் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வருண் சக்கரவர்த்தி ஒரு ரன்னுடன் களத்தில் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

16 வது ஓவரில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் அடித்த பந்தை பவுண்டரியில் நின்றிருந்த டிம் டேவிட் கேட்ச் பிடித்தார். அப்போது டிம் டேவிட் பந்தை நக்குவது போல் செய்த செயல் அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – மேத்யூ ஷார்ட் களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் மேத்யூ ஷார்ட் 25 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரியை மட்டும் விரட்டி 12 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ் – டிம் டேவிட் ஜோடியில், மிட்செல் மார்ஷ் 30 ரன்னுக்கு அவுட் ஆனார்.

அவருடன் ஜோடியில் இருந்த டிம் டேவிட், துபே பந்தில் மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு, அவரின் அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பின்னர் களம் புகுந்த மார்கஸ் ஸ்டோனிசுடன் ஜோஷ் பிலிப் ஜோடி சேர்ந்தார். இதில் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ஜோஷ் பிலிப் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி 4 ரன்னில் போல்ட் அவுட் ஆனார். இதேபோல், 17 ரன்கள் எடுத்து அதிரடியாக மட்டையை சுழற்ற முயன்ற மார்கஸ் ஸ்டோனிஸ் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

அடுத்த வந்த சேவியர் பார்ட்லெட் வாஷிங்டன் சுந்தரின் அடுத்த பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பின்னர் களத்தில் இருந்த பென் ட்வார்ஷூயிஸ் – நாதன் எல்லிஸ் ஜோடியில், பென் ட்வார்ஷூயிசுக்கு பும்ரா இறக்கிய யார்க்கர் ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதனால் அவர் 5 ரன்னுடன் நடையைக் கட்டினார். கடைசியாக களத்தில் இருந்த நாதன் எல்லிஸ் – ஆடம் ஜாம்பா ஜோடியில் ஜாம்பா கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் கடைசி டி20ஐ நவம்பர் 8 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.

Readmore: நவ.15ஆம் தேதிக்கு பிறகு..!! மீண்டும் தீவிரமாக தொடங்கும் வடகிழக்கு பருவமழை..!! வானிலை மையம் பரபரப்பு தகவல்..!!

KOKILA

Next Post

“2026 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிப்பு”..!! திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

Fri Nov 7 , 2025
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, ஆளுங்கட்சியான திமுக தனது பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக தென்மண்டல பொறுப்பாளரான கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் […]
mk stalin 2

You May Like