IND vs ENG| முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி!. பயிற்சியாளர் கம்பீர் அதிரடி மாற்றம்?. வெளியான தகவல்!.

eng test india loss gambir 11zon

லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பென் டக்கெட்டின் 149 ரன்களின் அற்புதமான சதத்தின் அடிப்படையில், இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின்’ டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுக்க, இங்கிலாந்துக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 21/0 ரன் எடுத்து, 350 ரன் பின்தங்கியிருந்தது.

நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. டக்கெட், கிராவ்லே விவேகமாக விளையாடினர். பும்ராவுக்கு எதிராக ‘ரிஸ்க்’ எடுக்க கூடாது; மற்ற இந்திய பவுலர்களை விளாச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு ஏற்ப மற்ற ‘வேகங்கள்’ ஆரம்பத்தில் தடுமாறினர். இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல், பவுண்டரி அருகே வந்து ‘அட்வைஸ்’ செய்யும் நிலை ஏற்பட்டது. ஜடேஜாவின் ‘சுழலும்’ எடுபடவில்லை. முக்கியமான முதல் ‘செஷனில்’ இங்கிலாந்து அணி ஓவருக்கு 4 ரன் வீதம் 96 ரன் எடுத்து, ஆதிக்கம் செலுத்தியது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 117/0 ரன் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி 181/0 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது. 22 நிமிட தாமதத்திற்கு பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ கிராவ்லே (65) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய கிருஷ்ணா பந்தில் போப் (8) போல்டானார். ஜடேஜா பந்தில் ‘ஸ்விட்ச் ஹிட்’ மூலம் சிக்சர் அடித்தார் டக்கெட். இந்த நேரத்தில் பந்துவீச வந்த ஷர்துல் தாகூர் (55வது ஓவர்) மிரட்டினார். 3வது பந்தில் டக்கெட்டை (149, 21×4, 1×6) அவுட்டாக்கினார். 4வது பந்தில் புரூக்கை (0) வெளியேற்றினார். அடுத்த பந்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 ரன் எடுக்க, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 269/4 ரன் எடுத்திருந்தது. மீண்டும் மழை பெய்ய, ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், ஆட்டம் ஆரம்பமானது. ஜடேஜா ‘சுழலில்’ ஸ்டோக்ஸ் (33) சிக்கினார்.

அனுபவ ஜோ ரூட், ஜேமி ஸ்மித் பொறுப்பாக ஆடினர். அரைசதம் கடந்த ரூட், அணியை கரை சேர்த்தார். ஜடேஜா ஓவரில் (82) ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஸ்மித், கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து வென்றது. தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளதால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட ஈகோ மற்றும் விருப்பங்கள் அணியை பாதிப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் கம்பீரை நீக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: மகிழ்ச்சி..! மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு …! தமிழக அரசு அரசாணை..!

KOKILA

Next Post

சோகம்..! தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு வந்த நிர்வாகி சாலை விபத்தில் மரணம்...!

Wed Jun 25 , 2025
பூந்தமல்லியில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு சென்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தவெக தலைவருமான விஜயின் 51-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ரத்த தானம் வழங்குதல், சிறப்பு பிரார்த்தனைகளை செய்தல், மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் உள்ளிட்ட […]
vijay 2025 2

You May Like