இந்தியாவுக்கே பெருமை..!யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்ப்பு..!

diwali 1

இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. தீபாவளி என்பது ஒளியின் திருநாள், இருளை நீக்கி ஒளியை பரப்பும் பண்டிகையாக கருதப்படுகிறது.. தீபாவளி நாளில் வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்படுகின்றன; இது இருள், அறியாமை, துயரம் ஆகியவை விலகி ஒளி, அறிவு, நல்வாழ்வு வரவேற்கப்படுவதை குறிக்கிறது. ராமர் திரும்பிய நாள், கிருஷ்ணன் நரகாசுரனை வீழ்த்திய நாள், லட்சுமியை வரவேற்கும் நாள் போன்ற பல புராண சம்பந்தமான காரணங்களால் இந்த விழா இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மரபுகளோடு கொண்டாடப்படுகிறது.


இந்துக்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்களும் கொண்டாடுகிறார்கள்; ஒவ்வொரு பிராந்தியத்திலும் தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் உள்ளன..

தீபாவளி அன்று மக்கள் வீட்டை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து உறவினர்களை சந்திப்பதும், பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் பகிர்வதும் வழக்கம். முக்கியமாக, செல்வம் மற்றும் வளத்தின் தெய்வமான மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது. தீபாவளி, ஒரு பண்டிகை மட்டுமல்ல; குடும்பம், மகிழ்ச்சி, பகிர்வு, நம்பிக்கை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இனிய விழாவாக கருதப்படுகிறது.

இந்தியாவின் தொன்மை வாய்ந்த தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகையை கலாச்சார பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.. தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ பட்டியலில் இணைக்க 2023-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. இது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கிறது.. முன்னதாக இந்தியாவின் யோகா, கும்பமேளா, மேற்குவங்க துர்கா பூஜை, கேரளாவின் கூடியாட்டம் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் உள்ளன..

Read More : ‘எல்லோரும் இந்தி பேசுவதில்லை’: இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை பாராட்டிய புடின்!

RUPA

Next Post

தமிழ்நாடு அரசின் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை.. ரூ.40,000 சம்பளம்..!! 8வது படித்திருந்தால் போதும்..

Wed Dec 10 , 2025
Job in the District Health Department of the Tamil Nadu Government.. Salary of Rs.40,000..!
job2

You May Like