200 மருந்துகளுக்கான இறக்குமதி வரியை தளர்த்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
ஹெச்.ஐ.வி, புற்றுநோய், மாற்று மருந்து மற்றும் ஹீமாட்டாலஜி போன்ற தீவிர நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் விரைவில் இந்தியாவில் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சுமார் 200 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து தளர்வு அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த நடவடிக்கை நிவாரணம் அளிக்கும் என்று கருதப்படுகிறது.. மத்திய அரசால் அமைக்கப்பட்ட துறைகளுக்கு இடையேயான குழு, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவ இறக்குமதிகளுக்கு சுங்க வரி விலக்குகள் மற்றும் சலுகைகளின் தொகுப்பை பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் இந்தக்குழு சமர்ப்பித்துள்ளது.. நுரையீரல், மார்பகம் மற்றும் பிற தீவிரமான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெம்பிரோலிஸுமாப் (கீட்ருடா பிராண்ட் ), ஓசிமெர்டினிப் (டாக்ரிஸோ பிராண்ட் ) மற்றும் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் (என்ஹெர்டு பிராண்ட்) போன்ற பல உலகளாவிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியை முழுமையாக விலக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
பெரும்பாலும் இந்த மருந்துகளை ஒரு டோஸ் வாங்குவதற்கு கிட்டத்தட்ட லட்சங்களில் செலவாகும்.. இந்த மருந்துகள், அதிக இறக்குமதி சுமை காரணமாக பலருக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு வரியை குறைக்கும் பட்சத்தில் இதன் விலை பன்மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : 3-ஆம் வகுப்புக்கு ரூ.2.1 லட்சம் Fees? நர்சரி கட்டணத்திற்கு EMI.. CoinSwitch இணை நிறுவனரின் பதிவு வைரல்..