அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா!… 2ஆம் நாள் முடிவில் 151 ரன்கள், 5 விக்கெட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது. பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சரி, அவர் தான் ஆட்டமிழந்துவிட்டார், சுப்மன் கில் இருக்கிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில், அவரும் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். எனினும், ரவீந்திர ஜடேஜா எளிதான பந்தில் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் 14 பந்துகள் பிடிப்பதற்குள்ளாக மார்பு, முழங்கைப் பகுதியில் காயம் ஏற்பட்டார். இதே போன்று அஜிங்கியா ரஹானேவிற்கு கையில் காயம் ஏற்பட்டு பேண்டேஜ் போடப்பட்டது. அடுத்து தலையிலும் காயம் ஏற்பட்டது. இப்படி அடிமேல் அடி வாங்கி இந்திய வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கேஎஸ் பரத் 5 ரன்னுடனும், அஜிங்கியா ரஹானே 29 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 2 நாட்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. பாலோ ஆன் தவிர்க்க இந்தியா இன்னும் 118 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

ஓய்வூதியர்கள் கவனத்திற்கு..! ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் புதிய நடைமுறை...! தமிழக அரசு அதிரடி...!

Fri Jun 9 , 2023
ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச்‌ சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள்‌ தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச்‌ சான்றை அளிக்க ஆண்டுதோறும்‌ ஜூலை முதல்‌ செப்டம்பர்‌ வரை மூன்று மாதங்கள்‌ அவகாசம்‌ அளிக்கப்படும்‌. இணைய சேவை மையங்கள்‌, அஞ்சல்‌ வழி, கருவூலகணக்குத்‌ துறையில்‌ நேரடியாக சமர்ப்பித்தல்‌ உள்ளிட்ட வழிகளில்‌ வாழ்வுச்‌ […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like