ஆபரேஷன் சிந்தூரில் 6 பாக். விமானங்களை இந்தியா அழித்தது – இந்திய விமானப்படைத் தலைவர் பேச்சு..

iaf chief

ஆபரேஷன் சிந்தூரின் போது 6 பாக், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இராணுவ விமானமான AEW&C/ELINT விமானத்தையும் அழித்ததாகவும் அவர் கூறினார்.


பெங்களூருவில் நடந்த ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நிகழ்ச்சியில் பேசிய போது அவர் இந்த தகவல்களை தெரிவித்தார். விமானங்கள் மற்றும் தளங்களின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஒரு அதிகாரி விரிவாகப் பேசியபோது இதுவே முதல் முறை.

மேலும் பேசிய ஐ.ஏ.எஃப். தலைவர், மே 7 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்கு முன்பே கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறினார்.. இந்தியத் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தின் துல்லியம் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கணக்கிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

RUPA

Next Post

அன்புமணியே தலைவராக தொடர்வார்.. ராமதாஸ் இல்லாமல் நடக்கும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம்..

Sat Aug 9 , 2025
பாமக பொதுக்குழுவில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் […]
PMK meeting 1

You May Like