இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி.. 12 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்..!! செம அறிவிப்பு.. 

job 1

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) தனது குழாய்கள் பிரிவில் தேசிய அளவில் 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


எனென்ன பிரிவுகளில் தொழிற்பயிற்சி நிரப்பப்படுகிறது?

* மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசனினி டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவி உள்ளன.

* கணக்கு (Accountant) மற்றும் உதவி எச்.ஆர் பிரிவுகளில் தொழிற்பிரிவு அப்ரண்டிஸ் இடங்கள் உள்ளன.

* 12-ம் வகுப்பு தகுதியில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 24 வரை இருக்கலாம். வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தளர்வு பின்பற்றப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

* டெக்னிக்கல் அப்ரண்டிஸ் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

* கணக்கு மற்றும் உதவி எச்.ஆர் பிரிவிற்கு வணிகம் மற்றும் ஏதேனும் ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும்.

* டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இதில் Domestic Data Entry Operator பிரிவில் உள்ள இடங்களுக்கு அதற்கான திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: தொழிற்பயிற்சி பெறும் காலத்தில், மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மொத்தம் 12 மாதங்களுக்கு பயிற்சி பெற வேண்டும்.

தேர்வு முறை:

* எழுத்துத் தேர்வு, நேர்காணல் எதுவும் இல்லை.

* விண்ணப்பிக்கும் போது குறிப்பிடப்படும் கல்வித் தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

* மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முன்னுரிமை பெறுவர்.

சான்றிதழ் சரிபார்ப்பு & மருத்துவ பரிசோதனை

  • கல்வித் தகுதி சான்றிதழ்கள்
  • மதிப்பெண் சான்றிதழ்கள்
  • திறன் சான்றிதழ் (ITI / பிற பயிற்சி)
  • வகுப்பு / பிரிவு சான்று
  • பிறந்த தேதி சான்று
  • ஆதார் எண்
  • அடையாள அட்டை
  • நிரந்தர வீட்டு முகவரி சான்று
  • இவற்றின் அசல் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • அத்துடன், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி நிரூபிக்கப்பட்ட பிறகு மட்டுமே இறுதி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முதலில் https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/student_register.php என்ற தொழிற்பயிற்சிக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்டணம் கிடையாது.

கடைசி தேதி: செப்டம்பர் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: முன்கூட்டியே தயாராக இருந்த 20 சவக்குழிகள்..!! மயானத்தை பார்த்து பீதியில் உறைந்துபோன பொள்ளாச்சி மக்கள்..!!

English Summary

Indian Oil Corporation (IOCL) has announced 537 apprenticeship vacancies nationwide in its pipelines division.

Next Post

450 மாணவர்கள்.. 120 ஆசிரியர்கள்.. உலகின் மிக விலையுயர்ந்த பள்ளி இதுதான்..! கட்டணம் கேட்டா ஷாக் ஆகிடுவிங்க..

Mon Sep 8 , 2025
This is World’s most expensive school, only 450 students study here
most expensive school 1

You May Like