இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் (Indian Rare Earth Limited – IREL) நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய தொழிற்பயிற்சி சட்டம் 1961 கீழ், பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 41 இடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி பெறுவர். பொறியியல் டிகிரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை மாத அடிப்படையில் வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி விவரம்:
பட்டப்படிப்பு தொழிற்பயிற்சி (Graduate Apprentices) – 4 இடங்கள்
- எலெக்ட்ரிக்கல் – 2
- சிவில் – 1
- மெக்கானிக்கல் – 1
டெக்னீஷியன் தொழிற்பயிற்சி (Technician Apprentices) – 4 இடங்கள்
- மெக்கானிக்கல் – 1
- எலெக்ட்ரிக்கல் – 1
- சிவில் – 2
தொழிற்பிரிவு பயிற்சி (Trade Apprentices) – 33 இடங்கள்
- பிட்டர் – 10
- எலெக்ட்ரிஷியன் – 5
- மெக்கானிக் – 1
- வெல்டர் – 4
- எலெக்ட்ரானிக் – 2
- ஏசி மெக்கானிக் – 1
- டர்னர் – 1
- ப்ளம்பர் – 2
- கார்பெண்டர் – 2
- ஆய்வக உதவியாளர் – 2
- PASAA – 3
குறிப்பாக ப்ளம்பர் மற்றும் கார்பெண்டர் பிரிவுகளில் மட்டும் 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். மற்ற பிரிவுகளுக்கு 1 ஆண்டு பயிற்சியாகும்.
வயது வரம்பு: தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 25 வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
Graduate Apprentices: எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு (B.E / B.Tech).
Technician Apprentices: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் பிரிவுகளில் டிப்ளமோ.
Trade Apprentices: பிட்டர், எலெக்ட்ரிஷியன், மெக்கானிக், வெல்டர், டர்னர், பிளம்பர், கார்பெண்டர் உள்ளிட்ட பிரிவுகளில் ITI தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தேர்வானவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* சின்னவிளை, பெரியவிளை, புத்தூர், மிடாலம், கீழ்மிடாலம் மற்றும் குறும்பனை கொட்டில்பாடு கிராமங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* தேர்வு செய்யப்பட்டவர்கள் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/ ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://www.irel.co.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்றிதழ், வகுப்பு பிரிவு சான்றித, புகைப்படங்கள் ஆகியவற்றை சேர்ந்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முகவரி: The Chief Manager – HRM (Legal & ER), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252.
கடைசி தேதி: விண்ணப்பங்கள் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் முன்னர் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.
Read more: “செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்..” முதல் ஆளாக ஆதரவளித்த ஓபிஎஸ்..



