அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள டார்கெட் என்னும் கடையில், இந்தியப் பெண் ஒருவர் 7 மணி நேரத்துக்கும் மேலாக கடைக்குள் இருந்து ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்றதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையிலிருந்து ரூ.1.08 லட்சம் (அமெரிக்க டாலர் $1,300) மதிப்புள்ள பொருட்களை திருடியதாகக் கூறப்படும் அந்தப் பெண், “இந்தப் பொருட்களுக்கு நான் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்… நான் இந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல… நான் இந்தியாவை சேர்ந்தவள்… என்னை மன்னித்துவிடுங்கள்… என அந்தப் பெண், போலீசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சினார். “இந்தியாவில் திருட அனுமதி இருக்கிறதா?” என கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி அவரது இந்த விளக்கங்களை ஏற்காமல், சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.
டார்கெட் கடை ஊழியர்கள் கூற்றுபடி, அந்தப் பெண் மொத்தம் 7 மணி நேரம் கடைக்குள் இருந்து, பல பொருட்களை வாங்குவது போல கடையை சுற்றி வந்தார். பொருட்களை தள்ளும் வண்டியில் வைத்துக்கொண்டு பணம் செலுத்தும் இடங்களைத் தவிர்த்து வெளியே செல்ல முயன்றுள்ளார். அவர் எடுத்துச் செல்ல முயன்ற பொருட்களின் மொத்த மதிப்பு $1,300 (இந்திய மதிப்பில் ரூ.1.08 லட்சம்) ஆகும்.
இந்த சம்பவம் வெளியாகிய பிறகு, யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பலர் புலம்பெயர் குடியிருப்பாளர்களின் சட்ட மீறலுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். “ஒருவர் 7 மணி நேரம் ஒரு கடையில் இருந்து திருட முடியும். இது நிரந்தர குடியுரிமை எதிர்ப்பு அலைகளை தூண்டும்” என எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர், “இந்தியா போல ஒரு பண்பாட்டு நாடு இந்த மாதிரியான செயலில் பழி சுமக்க வேண்டியதா?” என விமர்சித்துள்ளார். அந்தப் பெண் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இதனிடையே திருட்டு போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீண்டும் அமெரிக்கா செல்லாத வகையில் விசா நிராகரிக்கப்படும் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read more: டைப் 2 நீரிழிவு நோய்க்கு தனிமை ஒரு காரணமா..? – எச்சரிக்கும் புதிய ஆய்வு முடிவுகள்