இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அதிநவீன பாதுகாப்பு முயற்சியான மிஷன் சுதர்சன் சக்ரா தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பிரதமர் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது இது 12-வது முறையாகும்.. சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களைச் சுற்றி ஒரு சக்திவாய்ந்த, பல அடுக்கு கேடயத்தை உருவாக்க இந்த அமைப்பு சமீபத்திய தொழில்நுட்ப கருவிகளை ஒருங்கிணைக்கும் என்று கூறினார்.
மேலும் “அடுத்த 10 ஆண்டுகளில், 2035 ஆம் ஆண்டுக்குள், இந்த தேசிய பாதுகாப்பு கேடயத்தை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் விரும்புகிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, சுதர்சன் சக்ராவின் பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்… நாடு சுதர்சன் சக்ரா மிஷனை தொடங்கும்,” என்று அவர் கூறினார்.
மேலும் “ புதிய பாதுகாப்பு அமைப்பைப் பற்றி விரிவாகக் கூறிய பிரதமர், “இந்தியா நாட்டைப் பாதுகாக்க ‘சுதர்ஷன் சக்ரா’ பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமது மூலோபாய நிறுவல்கள், நமது நகரங்கள் மற்றும் நமது புனித இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். இது நமக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு விரோத முயற்சிக்கும் ஒரு வலிமையான தடுப்பாக இருக்கும்” என்று பிரதமர் அறிவித்தார். பிரதமர் மோடியின் கூற்றுப்படி, மிஷன் சுதர்ஷன் சக்ரா மேம்பட்ட கண்காணிப்பு, இடைமறிப்பு மற்றும் எதிர் தாக்குதல் திறன்களை இணைத்து, வான், நிலம் மற்றும் கடல் களங்களில் அச்சுறுத்தல்களை விரைவாக நடுநிலையாக்க உதவும்.
இந்தியாவின் இந்த புதிய பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலின் புகழ்பெற்ற அயன் டோம், வான்வழித் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் பெயர் பெற்ற பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பிற்கு போட்டியாக இருக்கும். 2010களில் பயன்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹெஸ்பொல்லாவிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இடைமறித்துள்ளது, இஸ்ரேல் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடி இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.. ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 7, 2025 அன்று இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது.. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியப் படைகள் 9 பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றன, மேலும் 13 பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்களைத் தாக்கின. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்த நிலையில், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதல்களை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சுதந்திரம் அடைந்தபோது ஒரு ரூபாயில் என்ன வாங்க முடியும்?. தங்கம், ரேஷன் பொருட்கள் விலை என்ன தெரியுமா?.