நடுங்க வைக்கும் மறுபிறவி சம்பவம்: சுமித்ராவாக இறந்து சிவாவாக பிறந்த பெண்..! இன்று வரை விலகாத மர்மம்..!

sumithra recarnition

வாழ்க்கை, மரணம், மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது, ஆன்மா என்றால் என்ன—இந்த அனைத்தையும் யாரும் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி: இத்தகைய விஷயங்களில் முழுமையாக நல்லதும் இல்லை.. அல்லது முழுமையாக கெட்டதும் இல்லை.. ஏதோ ஒரு சிறிய இடைவெளி இருக்க தான் செய்கிறது.. இந்த மர்மமான இடைவெளியில் தான் ஆன்மா மறுபிறவி என்ற கருத்தும் இடம் பெறுகிறது. அத்தகைய மர்மமான சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுவது தான் சுமித்ரா சிங் என்பவர் தொடர்பான இந்த நிகழ்வு.


இறந்து மீண்டும் உயிர் பெற்ற சுமித்ரா

வட இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சுமித்ரா சிங், ஒருமுறை இறந்ததாக கருதப்பட்டு, பின்னர் மீண்டும் உயிர் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் உயிர் திரும்பியதும் அவர் கூறிய விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

உயிர் பெற்ற பிறகு, சுமித்ரா தன்னை “சிவா” என்று கூறினார். அந்த சிவா என்ற பெண், சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பெண் என்றும், தன்னை கொன்றது தனது கணவரின் உறவினர்களே என்றும் அவர் தெரிவித்தார்.

சிவா என்ற பெண்ணின் மரணத்துடன் ஒத்த விவரங்கள்

சுமித்ரா கூறிய தகவல்கள், 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த சிவா திவேதி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கை விவரங்களுடன் ஒத்துப் போனது.

சிவா திவேதியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அவரது பெற்றோர், சிவாவை அவரது கணவர் வீட்டினர் கொலை செய்து, அதை தற்கொலை போல மாற்றியதாக கூறுகின்றனர்.. இதுகுறித்து சிவாவின் தந்தை ராம் சியா திரிபாதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான செய்திகள், உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா பகுதியில் உள்ள செய்தித்தாள்களிலும் வெளியாகியிருந்தன.

சுமித்ராவின் வாழ்க்கை பின்னணி

இந்த சம்பவம் நடந்தது 1985ஆம் ஆண்டு. அப்போது சுமித்ராவுக்கு 17 வயது. அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷரீஃப்புரா என்ற கிராமத்தில் வாழ்ந்தார். திருமணமான அவர், ஒரு குழந்தையின் தாயாக இருந்தார். கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தார்.

அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி வெளியிட்ட “இந்தியாவில் ஆவி பிடித்தல் வகையைச் சேர்ந்த ஒரு வழக்கு, அமானுஷ்ய அறிவுக்கான ஆதாரத்துடன்” (University of Virginia School of Medicine வெளியிட்ட “A Case of the Possession Type in India With Evidence of Paranormal Knowledge)” என்ற ஆய்வு இதழில், சுமித்ராவின் உடல்நிலை குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணத்தை முன்கூட்டியே கூறிய சுமித்ரா

1985ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, சுமித்ராவுக்கு அடிக்கடி மயக்கம், கண்கள் மேலே திரும்புதல், பற்களை இறுக்கிக் கொள்வது போன்ற நிலைகள் ஏற்பட்டதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. சில நேரங்களில், அந்த நிலைகளில் அவர் பேசவும் செய்தார். ஒரு நாள், “மூன்று நாட்களில் நான் இறந்து போவேன்” என்று அவர் கூறினார். அவர் கூறியபடியே, ஜூலை 19, 1985 அன்று, சுமித்ரா இறந்துவிட்டதாக கருதப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கையின் படி, சுமித்ராவுக்கு நாடி இல்லை, மூச்சு இல்லை, முகம் முழுவதும் இரத்தம் வடிந்து இறந்த மனிதரைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இறந்துவிட்டதாக அனைவரும் நம்பினர். அவரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென சுமித்ரா உயிர் பெற்றார்.

உயிர் பெற்ற பிறகு நடந்த அதிர்ச்சி

உயிர் பெற்றதும் சுமித்ரா சில நேரம் குழப்ப நிலையில் இருந்தார். அதன் பிறகு அவர் கூறிய வார்த்தைகள், சுற்றியிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. தன்னை சுமித்ரா என்பதை ஏற்க மறுத்த அவர், “நான் சிவா. என்னை என் கணவர் வீட்டினர் கொன்றார்கள்” என்று கூறினார். சுமித்ரா தனது கணவரையும் குழந்தையையும் ஏற்க மறுத்தார். தன்னை டிபியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், சிவாவின் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

சுமித்ரா கூறிய பல விவரங்கள், 1985 மே 18 அல்லது 19 அன்று இறந்த சிவா திவேதி என்ற பெண்ணின் வாழ்க்கை விவரங்களுடன் முழுமையாக ஒத்திருந்தது. சுமித்ரா வாழ்ந்தது ஒரு கிராமம் என்பதால், ஆரம்பத்தில் பலர் இதை ஆவி பிடித்தது அல்லது மனநிலை பாதிப்பு என நம்பினர்.

சிவாவின் தந்தையின் விசாரணை

இந்த தகவல், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகே சிவாவின் தந்தையான ராம் சியா திரிபாதிக்கு தெரிய வந்தது. டிபியாபூருக்கு சென்றபோது, “இறந்த உங்கள் மகள், தொலைவிலுள்ள ஒரு கிராமப் பெண்ணின் உடலில் தோன்றியுள்ளார்” என்ற வதந்தியை அவர் கேட்டார். இதனை உறுதி செய்ய மேலும் இரண்டு மாதங்கள் ஆனது. அதன் பின்னர், ஷரீஃப்புரா அருகிலுள்ள முர்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை அனுப்பி, சுமித்ராவின் நிலையை அவர் சரிபார்த்தார்.

குடும்பத்தை உடனே அடையாளம் கண்ட சுமித்ரா

ராம் சியா திரிபாதி நேரில் சுமித்ராவை சந்தித்தபோது, அவர் உடனே அவரை “அப்பா” என்று அழைத்தார். பின்னர் எட்டாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சிவாவின் மற்ற உறவினர்களையும் அவர் சரியாக அடையாளம் கண்டார். ஆனால் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், படிக்காத சுமித்ரா, திடீரென ஒரு படித்த பெண்ணைப் போல நடந்து கொள்ளத் தொடங்கினார். சிவாவின் தந்தை ஒரு கல்லூரி விரிவுரையாளர். சிவா, பிஏ பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமித்ரா உண்மையில் தனது கடந்த பிறவியை நினைவுகூர்ந்தாரா? அல்லது மற்றொருவரின் நிறைவேறாத வாழ்க்கை கதையை வாழ்ந்தாரா? இதற்கான உறுதியான பதில் இன்று வரை இல்லை. ஆன்மாவைப் போலவே, இந்த சம்பவத்தின் உண்மையும் இன்னும் மர்மமாகவே உள்ளது.

RUPA

Next Post

இந்த திட்டம் பற்றி தெரிந்தால், முதலீடு செய்யாமல் இருக்க மாட்டீங்க..! ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.5,550 வரவு வைக்கப்படும்.!

Fri Jan 30 , 2026
நடுத்தர வர்க்க மக்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இவை முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உத்தரவாதங்களையும் நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன. தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த வருமான […]
post office money

You May Like