இந்தியா பல்வேறு மரபுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நிலமாக உள்ளது.. ஆனால் சில மர்மமான கிராமங்களும் இந்தியாவில் உள்ளன.. இந்தியாவின் சில கிராமங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், பில்லி, சூனியம், செய்வினை பற்றிய கதைகளால் சூழப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு கிராமம் தான் அசாமில் உள்ள மாயோங் என்ற கிராம்… இந்த கிராமம் “இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது..
பல நூற்றாண்டுகளாக, மாயோங் கிராமம் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் மாய, மந்திரக் கதைகளின் மையமாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த மந்திரங்கள் மூலம் மட்டுமே ஒரு மனிதரை கிளி, புறா அல்லது நரியாக மாற்ற முடியும் என்று இந்த கிராம மக்கள் நம்புகின்றனர்…
மாயோங் ஏன் மர்மமானது?
அசாமின் மோரிகான் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மாயோங், இயற்கை அழகு மற்றும் மாய மந்திரங்களின் தனித்துவமான கலவையாக உள்ளது.. இந்த கிராமம், பல நூற்றாண்டுகள் பழமையான அமானுஷ்ய சடங்குகள், பில்லி சூனியம் மற்றும் பாரம்பரிய மூலிகை மருத்துவ நடைமுறைகளுக்கு பெயர்போன இடமாக இருந்து வருகிறது. அமானுஷ்ய சடங்குகள் மற்றும் பூர்வீக குணப்படுத்தும் முறைகளில் இன்னும் இந்த கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
‘மாயோங்’ என்ற பெயருக்கு பின்னால் இரண்டு காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமஸ்கிருத வார்த்தையான ‘மாயா’ என்பதிலிருந்து பெறப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர்., அதாவது மாயை அல்லது மந்திரம். இன்னும் சிலர் இதை மங்கோலிய வார்த்தையான ‘மியான்’ என்று கூறுகின்றனர்.. பண்டைய மங்கோலிய பழங்குடியினர் ஒரு காலத்தில் இப்பகுதியில் குடியேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது..
இந்த மர்மமான மரபை, மாயோங் பில்லி, சூனிய அருங்காட்சியகம் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் தந்திரம், பண்டைய சடங்கு கருவிகள் மற்றும் அமானுஷ்ய கருவிகள் பற்றிய அரிய நூல்கள் உள்ளன. எனினும் இந்த நவீன காலக்கட்டத்தில் பில்லி சூனியம் மிகவும் குறைவாகவே நடைமுறையில் இருந்தாலும், கிராமத்தின் வரலாறு மற்றும் மர்மமான சூழல் இன்னும் உலகம் முழுவதிலுமிருந்து ஆராய்ச்சியாளர்கள், பயணிகளை ஈர்க்கிறது.
மாயோங்கின் மரபுகள் மற்றும் கதைகள் இந்தியாவின் வழக்கமான கிராமப்புற வாழ்க்கையுடன் முற்றிலும் வேறுபடுகின்றன. தங்கள் மூதாதையர்கள் திறமையான தாந்த்ரீகர்கள், மந்திரம் மற்றும் மறைபொருள் சடங்குகளில் வல்லுநர்களாக இருந்ததாக இந்த கிராமவாசிகள் நம்புகிறார்கள்.
மந்திரங்கள் மூலம் மனிதர்களை விலங்குகளாக மாற்றுவது அல்லது மூலிகைகள் மற்றும் மந்திரங்களைப் பயன்படுத்தி அற்புத சாதனைகளைச் செய்வது என மாயாஜாலங்களை தங்கள் மூதாதையர்கள் செய்தனர் என்று இந்த கிராம மக்கள் கூறுகின்றனர்..
எனினும் அறிவியல் கண்ணோட்டத்தில், மந்திரங்கள் அல்லது சடங்குகள் மூலம் மக்கள் உடல் ரீதியாக விலங்குகளாக மாற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வரலாற்றாசிரியர்கள் அத்தகைய கதைகளை புராணங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கீழ் வகைப்படுத்துகின்றனர். இருப்பினும், மாயோங் மக்களுக்கு, இந்தக் கதைகள் பெருமையின் ஆதாரமாகவே இருக்கின்றன.. இந்த கதைகள் அங்கு தலைமுறைகளாகக் கடத்தப்படுகின்றன.
இன்றும் கூட, மாயோங் மர்மமான அமானுஷ்ய மரபுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.. ஒரு சில வயதான தாந்த்ரீகர்கள் அல்லது சூனிய மருத்துவர்கள் இன்னும் பயிற்சி செய்கிறார்கள்..அவர்கள் நோய்களைக் குணப்படுத்தும், தீய சக்திகளை விரட்டும் மற்றும் மந்திரங்கள் மற்றும் சடங்குகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
மாயோங்கில் உள்ள நாட்டுப்புறக் கதைகள் பல மாய நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன: உதான் தந்திரம் (பறக்கும் தந்திரம்): ஒரு நபரை கண்ணுக்குத் தெரியாததாக மாற்ற அல்லது அவர்களை பறக்க வைப்பதற்கு இந்த மந்திரம் சொல்லப்படுகிறது.
ரூப் பரிவர்த்தன் தந்திரம் (வடிவத்தை மாற்றுதல்): மனிதர்களை விலங்குகளாக மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது.
வசீகரன் மந்திரம்: ஒருவரின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
மாறன் மற்றும் மோகினி வித்யா: எதிரிகளுக்கு தீங்கு விளைவிக்க அல்லது காதலில் உள்ள ஒருவரை மயக்க மந்திரங்கள்.
இந்தக் கூற்றுக்கள் எதுவும் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை மாயோங்கின் கலாச்சார நம்பிக்கைகளின் வளமான திரைச்சீலையை உருவாக்குகின்றன. வரலாற்று ரீதியாக, இந்த கிராமம் உண்மையில் மூலிகை மற்றும் மந்திர அடிப்படையிலான குணப்படுத்துதலுக்கு பெயர் பெற்றது, இருப்பினும் அற்புதமான மாற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.
மேலும் மற்றொரு கதையும் இங்கு சொல்லப்படுகிறது.. முகலாய பேரரசர் ஔரங்கசீப்புடன் இணைக்கப்பட்ட ஒரு புராணக்கதை. ஔரங்கசீப்பின் பரந்த இராணுவம் அஸ்ஸாமைக் கைப்பற்ற முன்னேறியபோது, மாயோங்கின் தாந்த்ரீகர்கள் தங்கள் மாய சக்திகளையும் மந்திரங்களையும் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வீரர்களை காணாமல் போக செய்தனர் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்..
இது பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள ஒரு சிறப்புமிக்க இடத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.. இந்த இடம் இன்னும் “மறைந்து போகும் மண்டலம்” என்று அழைக்கப்படுகிறது. எந்த வரலாற்று அல்லது அறிவியல் பதிவும் இந்தக் கதையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இது மாயோங்கின் புகழ்பெற்ற பிம்பத்தை சக்திவாய்ந்த தாந்த்ரீகர்களின் நிலமாக தொடர்ந்து வளப்படுத்துகிறது.
மாயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம் இந்த மரபைப் பாதுகாக்கிறது, பண்டைய தாந்த்ரீக வேதங்கள், சடங்கு கருவிகள், அரிய மூலிகைகள் மற்றும் எலும்புகளில் பொறிக்கப்பட்ட மந்திரங்களைக் கூட காட்சிப்படுத்துகிறது. இந்த மர்மமான கிராமத்தின் தாந்த்ரீக மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வரலாற்றைப் பற்றிய ஒரு முக்கியமான சாளரமாக இந்த அருங்காட்சியகம் செயல்படுகிறது.
மாயோங்கின் இயற்கை அழகு, மர்மமான சூழ்நிலை ஆகியவற்றை பார்வையாளர்களை ஈர்க்கிறது. இக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய தாந்த்ரீக சடங்குகள் மற்றும் விழாக்களைக் காணலாம், இருப்பினும் சுற்றுலா பயணிகள் இதில் பங்கேற்க முடியாது..
மாயோங் ஒரு கிராமம் என்பதை தாண்டி, மாய மந்திரம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அரிய சங்கமமாக திகழ்கிறது… ஒருவர் அதன் மாய சக்திகளை நம்பினாலும் இல்லாவிட்டாலும், கதைகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை இந்திய பாரம்பரியத்தின் ஈடுசெய்ய முடியாத பகுதியாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
Read More : இந்த 4 ராசி பெண்கள் நரியை போல தந்திரமானவர்களாம்.. தாங்கள் நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் செல்வார்களாம்..