அகமதாபாத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் இண்டிகோ விமானம் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விபத்த்தில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விமான விபத்துக்கு பிறகு, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது தொடர்கதையாக மாறி வருகிறது.. பல விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.. அந்த வகையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 60 பேருடன் சென்ற இண்டிகோ விமானம், இரண்டு என்ஜின்களில் ஒன்றில் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.. உடனடியாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.. புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, இதனால் உடனடியாக பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்…
விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் இருந்து நகரத் தொடங்கியிருந்தபோது, விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு “Mayday” அழைப்பு அனுப்பினார். காலை 11 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக ATR76 விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது.
முன்னதாக நேற்ற் டெல்லியின் IGI விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்த பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று இண்டிகோ விமான விபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தீ விபத்து காரணமாக விமானம் சிறிது சேதத்தை சந்தித்தது, இருப்பினும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் வழக்கம் போல் விமானத்தில் இருந்து இறங்கி பாதுகாப்பாக இருந்தனர் என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் “ஜூலை 22 அன்று ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா-315 விமானம், தரையிறங்கி வாயிலில் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்தது. அமைப்பின் வடிவமைப்பின்படி APU தானாகவே மூடப்பட்டது. பயணிகள் விமானத்திலிருந்து இறங்கத் தொடங்கியபோது இந்த நிகழ்வுகள் நடந்தன. மேலும் விசாரணைக்காக விமானம் தரையிறக்கப்பட்டது. “ என்றும் அவர் கூறியிருந்தார்..
Read More : ராஜஸ்தானில் பயங்கர நிலச்சரிவு.. பலத்த சத்தத்துடன் உடைந்த மலை.. பீதியில் உறைந்த மக்கள்..