பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியரை அடித்த தலைமை ஆசிரியர்…! இருவரும் செம சண்டை..! வீடியோ வைரல்..!

உ.பி.யில் பள்ளிக்கூடத்திற்கு வர தாமதம் ஆனதால் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பள்ளிக்கூடம் என்பது ஆசிரியர் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் இடமாக திகழ்கிறது. மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்ககூடிய ஆசிரியர்களே சண்டையிட்ட காட்சிகள்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.   

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் ஆசிரியையிடம் கேள்வி எழுப்பிள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது.

இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே வாய் சண்டை முற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர் இருவரையும் விலக்கிவிட்டார்.  இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘உருவகேலி செய்யாதீர்கள்’ 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் பிரபல நடிகை உருக்கம்..

shyamala

Next Post

Abortion | 18 வது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம்.!! சட்டத்தை மாற்றி அமைத்த டென்மார்க் அரசு.!!

Sat May 4 , 2024
50 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்படி கருக்கலைப்பு(Abortion) செய்வதற்கான நடைமுறைகளை தளர்த்தி இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 12 வாரங்கள் வரை சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்த சட்டத்தை மாற்றி 18 வாரங்கள் வரை கருக்கலைப்பை சட்டம் அனுமதிப்பதாக டென்மார்க் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. 15 முதல் 17 வயது வரையிலான பெண்களுக்கு பெற்றோரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்யும் வகையில் சட்டம் மாற்றப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் […]

You May Like