சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனையில் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வலிப்பு காரணமாக அஜித்குமார் உயிரிழந்தார் என FIR பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அஜித்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிபதிகள் கூறுகையில், “இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கவே உள்ளம் நடுங்குது. உடலில் எந்த இடமும் விடுபடாமல் காயங்கள் உள்ளது. FIR பதிவு செய்யாமல் சிறப்புப்படை போலீசார் எப்படி வழக்கை கையில் எடுத்தது எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் போலீஸ் எனும் அதிகாரம் தானே இப்படி கொடூரமாக தாக்கும் எண்ணத்தை கொடுத்தது என்றார்.
அஜித் மரணத்தை பொறுத்தவரை ஒரு மாநிலம் ஒரு குடிமகனை கொலை செய்துள்ளது. அஜித்குமார் கொலைக்கு காரணமாக உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அஜித் கொலை வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் நிலை அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்கிறோம் என தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
Read more: அஜித்குமார் லாக் அப் மரணம்.. ஜூலை 3-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. தவெக அறிவிப்பு..