தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்ததற்கு தொண்டர்களும் மக்களும் தான் காரணம்.. உங்களை நம்பி தான் நானும் நமது கட்சியும் இருக்கிறோம்.. இன்று உங்கள் அனைவருக்கும் தவெக தலைமை தொண்டனான எனது வாழ்த்துகள்..
1977-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தனர்.. பேரறிஞர் அண்ணா அமர்ந்த இடத்தில் இப்பட்டிப்பட்டவர்களும் அமர்ந்திருக்கின்றனர் என்று கண்ணீர் வடித்தேன்.. அதனால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என்று எம்.ஜி.ஆர் கூறினார்..
அதே போல் 2021-க்கு பின் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்றன் நிலை ஏற்பட்டுள்ளதே என்று தமிழக மக்கள் கண்ணீர் வடித்தனர்.. இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் தமிழக வெற்றிக் கழகம்.. இதை பார்த்து பலர் கொந்தளிப்பார்கள்.. அதை நாம் கண்டுகொள்ளக்கூடாது.. யார் அரசியலுக்கு வந்தாலும் கொந்தளிப்பது தான் இவர்களுக்கு வேலையே..
அதனால் தான் நாம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னரும் கொந்தளித்தனர்.. விஜய்க்கு என்ன அனுபவம் உள்ளது என்று கேட்ட அதே வாய் தான் அன்று எம்.ஜி.ஆரையும் கேள்வி எழுப்பினர்..
இதை எல்லாம் மக்கள் சைலண்டாக கவனித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்தனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.. 77 மாதிரியே அதர பழைய, துருப்பிடித்து போன பழைய ஆயுதங்களையே இப்போதும் கையில் எடுக்கின்றனர்.. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.. குறைந்தபட்சம் உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள்..
இப்படி அவர்கள் செய்யும் தவறுகள், ஊழல்கள் நாம் எடுத்து சொன்னால், 50 ஆண்டுக்கு முன்னாள் இருந்த அதே தகரடப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்.. பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்ட தானே தெரியும்.. அதற்காக அவர்கள் செய்யும் தவறை நாம் எதிர்த்து கேட்பாமல் இருக்க முடியுமா?
இன்று திருவள்ளூவர் இருந்திருந்தால் இந்த தீய சக்தியை பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் தெரியுமா? ”அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை எல்லாம் திமுக முதற்றே உலகு” என்று தான் எழுதியிருப்பார்..” என்று தெரிவித்தார்..



